பேசும் வார்த்தைகள் தடைபடும் போது
வேறு என்ன.. என்ன என்று
கேட்டு கொண்டே இருக்கிறாய்
அப்போது என்ன சொல்லட்டும்?
அப்போது என்ன சொல்லட்டும்?
உன் பெயரை சொல்லவா?
கொடுக்கப்படாத முத்தக்கணக்கை சொல்லவா?
காதலின் கனவுகளை சொல்லவா?
தினம் இரவில்
உன் நினைவில் அணைக்கும்
தலையணை பற்றி சொல்லவா?
இல்லை...
பிரிவில் இப்போதும்
நனைந்து கொண்டு இருக்கும்
கண்ணிமைகளை பற்றி சொல்லவா? ©
0 கருத்துரைகள்:
Post a Comment