அம்முகுட்டிக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.
ஏன் என்னைய யாருமே புரிஞ்சிக்கல?
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய சண்டை வருது. ஆனா காரணம் கண்டுபுடிக்க என்னால முடியல. அம்மாகிட்ட கேட்டா அழறா. அப்பா திட்டறாரு.
நான் குட்டிபாப்பா அப்படின்னு யாரும் என்னைய மதிக்கறதே இல்ல! ஒரு நிமிஷம் மூக்கை உறிஞ்சிக்கறேன்.. அப்படி பாக்காதீங்க! என்னோட சட்டைலதான் தொடைச்சிக்கறேன். யோசிச்சி யோசிச்சி கடைசியா கண்டுபுடிச்சேன்.
தப்பெல்லாம் அப்பாமேல தான். எப்படின்னு கேக்காதீங்க.. அது அப்படி தான்!என்னைய தான் எப்போவுமே திட்டிட்டே இருக்காறே. அதே மாதிரி தான் அம்மாவையும் கொடுமையா படுத்துறாரு.
இப்போ ஒரு நல்ல யோசனை வந்துடுச்சி. நேரா அம்மா கிட்ட போனேன். "அம்மா! இந்த அப்பா ரொம்ப மோசம். சண்டை போடறவங்க கூட பழககூடாதுன்னு நீதான சொல்லி இருக்க..
அதனால நாம ஏன் இந்த அப்பாவை விட்டுட்டு
வேற ஒரு அப்பா பாக்ககூடாது?!", அப்படின்னு
தான் கேட்டேன். அம்மா முகம் எப்படி இருந்தது தெரியுமா? பாவமா இல்ல கோவமான்னு புரியல.
"இனிமே இப்படி எல்லாம் பேசாத செல்லம்"னு மட்டும் சொல்லிட்டு என்னைய அனுப்பிட்டா. மறுநாளே அப்பாவும் அம்மாவும் சந்தோசமா பேசிட்டு இருக்காங்க. ஏன் அம்மா இப்படி இருக்கா?! தைரியமா சண்டை போடவேணாமா? எனக்கு புரியவே இல்ல.
பக்கத்துவீட்டு அருண் வேற என்னைய எப்போ பார்த்தாலும் அம்மா அப்பா விளையாட்டு விளையாட கூப்பிடறான். ச்ச.. நான் இந்த விளையாட்டுமட்டும் விளையாடவே
மாட்டேன்பா.. ஒரே அழுகுணி ஆட்டம்!
////ஒரு நிமிஷம் மூக்கை உறிஞ்சிக்கறேன்.. அப்படி பாக்காதீங்க! என்னோட சட்டைலதான் தொடைச்சிக்கறேன்....////
ReplyDeleteஎப்படி இப்படி....?????
சூழ்நிலைய விவரிக்கிறதுல தான்
கவிதையோட அழகே இருக்கு
இந்த கவிதையும் அழகு...
எல்லாருக்குள்ளேயும் இப்படி பல அனுபவங்கள் இருக்கு..
ReplyDeleteஉங்களுடையதும் இப்படி ஒரு குட்டி கதையா வரலாம் :)
நன்றி!
வித்தியாசமாக எழுதறீங்க,வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஆசியா! :)
ReplyDeleteதங்களுடைய பதிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது..