நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

06 December 2011

ஒரு கவிதை சொல்ல வேண்டாம்

இன்றாவது நீ பேசுவாயா?
இல்லை..
எப்போதும் போலவே
தென்னை மரக்கீற்றாய்
தலைமுடி அசைய நிற்பாயா?
வார்த்தைகளை தொலைத்து விட்டாய்
என்ன செய்யட்டும் உன்னை?
தண்டனையாய்...! 
புல்வெளியில் தள்ளிவிடட்டுமா?
மலர்களால் அடிக்கட்டுமா?
இல்லை..
மழலையாய் முதுகிலேறி குதிக்கட்டுமா?
சொல்..
இப்பொழுதே பேசி விடு
மழை வரப்போகிறது
நனைந்தபடி நீ பேசினால் 
தவளைக்கும் தொண்டை கட்டிவிடும்
யார் தடுக்கிறார்கள் உன் வார்த்தைகளை?
இந்த குட்டிப்பூனை மீசையா?
முறைக்காதே!
சுமைதாங்கி பார்த்திருக்கிறேன்
மௌனம் தாங்கியை 
இப்பொழுதுதான் பார்க்கிறேன்
கோவப்பட்டாவது பேசேன்!
வார்த்தை சப்தங்களுக்கு பதிலாய் 
முத்தசப்தங்கள் தர முயற்சிக்கிறாய் 
என்ன இது? ம்ம்.. 
ஒரு கவிதை சொல்ல வேண்டாம்
என்னை காதலிப்பதாய் சொல்
இனி நான் மௌனமாகிவிடுவேன்!9 comments:

 1. மாயாண்டி குடும்பத்தார் படத்துல வர்ற பொரொட்டா கடை பொண்ணையா சைட் அடிக்கிறீங்க...

  ReplyDelete
 2. ஒரு கவிதை சொல்ல வேண்டாம்
  என்னை காதலிப்பதாய் சொல்
  இனி நான் மௌனமாகிவிடுவேன்!
  //so sweet

  ReplyDelete
 3. அருமையாகப் போகிறது பதிவு
  கற்பனையைவிட நிஜத்தின் பங்கு
  அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ரமணி சார்! நீங்க ஒரு ஜீனியஸ் :) அன்பு நன்றிகள்!

  அட! சிவா! நன்றிகள்! :)

  பிரபாகரன்! ஒரு பொண்ணு இன்னொரு பொண்ண சைட் அடிக்க முடியாது.. :)

  ReplyDelete
 5. @ Lali
  Oops... எனக்கு லாலி என்ற பெயரில் ஒரு ஆண் நண்பர் இருந்தார்... அதனால் ஏற்பட்ட குழப்பம்...

  ReplyDelete
 6. //////
  சுமைதாங்கி பார்த்திருக்கிறேன்
  மௌனம் தாங்கியை
  இப்பொழுதுதான் பார்க்கிறேன்
  கோவப்பட்டாவது பேசேன்!
  //////////


  அழகிய ஒப்புமை...

  அன்பு நிறைந்த கவிதை...

  ReplyDelete
 7. நன்றி சௌந்தர் சார்!
  எப்போதும் போலவே இனிமையாய் உங்கள் வருகையும் கருத்துக்களும் :)

  ReplyDelete
 8. வாழ்த்துகள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...