நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

07 November 2012

பிரிவின் வலி


பிரிவின் வலி 
உனக்கு புரியவேண்டுமென்றே
ப்ரியம் தொலைத்ததாய் நடிக்கிறேன் 

ப்ரியம் தொலைத்ததின் வலி
எனக்கு புரியவேண்டுமென்றே 
பிரிந்து போவதாய்
நீயும் நடிக்கிறாய்


வலிகள்  குறைய 
வழிகள் ஏதும்
புரியாத நிலையில்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
இலைகள் நனைந்தாலும்
வேர்கள் நனையாத மரங்களாய்

தூரங்கள் தொலைத்த
ஒரு காதல் வேண்டுமென்று
தொலைத்து கொண்டிருக்கிறேன்
என் பாதைகளை..

என் இருப்பிருக்கும்
இறப்பிற்கும் நடுவே
நீளும் பயணங்கள்
உன் சந்திப்புகளை எண்ணியபடி..

எல்லா அழுகைக்கும் நடுவில்
ஒரு சிறு பிள்ளையெனவே 
உன் முகம் பார்க்கிறேன்
அன்னையெனவே எனை அணைத்து
நீ தரும் சிறு முத்தத்துக்காய்..

3 comments:

 1. அருமை வரிகள்... ரசித்தேன்...

  ReplyDelete
 2. கவிதை மிக அருமை......பகிர்வுக்கு மிக்க நன்றி .....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 3. அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...