என்றோ ஒரு நாள்
வாழ்த்துவதற்காக தான்
காத்திருக்கிறாயா பெண்ணே?
கருவிலேயே உணர்ந்துவிடு
நீயும் ஒரு உயிரென
காத்திருப்புகளை தொலைத்துவிடு
காற்றென மாறு
நிற்காதே... நீண்டு செல்
மலர் தொலைக்கும் வாசம்போல்
மனம் தொலைத்துவிடாதே
"ஆண் ஆதிக்கம்"
"பெண்ணுக்கு பெண்ணே எதிரி"
இன்னும் குப்பைகள் நிறைந்த
உலகம் இது..
சோர்ந்து போகாதே
சுத்தப்படுத்த நினைக்காதே
மிச்சங்களும் எச்சங்களும் சேரவிடாமல்
மரம் உதிர்க்கிறது இலைகளை
உதிர்த்துவிடு மதிப்பில்லாத
கட்டுப்பாடுகளையும், கவலைகளையும்
மீசையில்லா பாரதியடி நீ
போராட்டம் ஒன்றும் புதிதில்லை
என்றேனும் உனக்கும்
சிறகுகள் முளைக்கும்
மகளிர் உலகம் பிறந்தநாளை
அன்று கொண்டாடுவேன்...
நான் மகளாய் பிறந்ததை
கொண்டாடியதை போலவே..©
0 கருத்துரைகள்:
Post a Comment