நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

07 June 2011

இலை மறைக்கும் பூக்கள்

*****************************************************


கைப்பிடியில் இருந்து
திமிரும் குழந்தையாய்
என்னுடைய காதலும்
அவளுடைய மறுதலிப்பும்
*****************************************************

குறுஞ்சிரிப்புடன் மறுத்திருக்கலாம்
அவள் மீதான என் காதலை
குமுறி அழுது மறைக்கிறாள்
என் மீதான அவளின் காதலை
***************************************************** 

காணாமல் போனவர்கள் பட்டியலில்
என் இதயமும் இப்பொழுது
தொலைந்த இடமும் 
தொலைக்கப்பட்ட விதமும்
ஏன்.. 
தற்போதைய அதன் இருப்பிடமும் 
அவளறிவாள் நன்றாகவே
இருந்தும் மறுதலிக்கிறாள்
அப்பாவி குற்றவாளியாய்
*****************************************************

நீண்ட நகங்களுக்கு 
நக சாயம் பூசுவது போல
நான்.. 
நீட்டிய ஒற்றை ரோஜாவுக்கு 
நட்பு சாயம் பூசுகிறாள்
*****************************************************


உணவருந்த பிடிக்கா
ஒரு முழுநிலவு இரவில் 
தின்றுகொண்டிருக்கிறது என்னை
அவளின் நினைவுகள்.. 
*****************************************************

நான் வேண்டுவது 
கூடை பூக்கள் இல்லை
அவள் சூடியிருக்கும்
ஒற்றை ரோஜாவை.. 
*****************************************************

நானறிந்த ரகசியம்
அவளின் காதல்
நானறியா ரகசியம்
அவள்..
*****************************************************

23 comments:

 1. முதல் மழை எனை நனைத்ததே

  ReplyDelete
 2. >>குறுஞ்சிரிப்புடன் மறுத்திருக்கலாம்
  அவள் மீதான என் காதலை
  குமுறி அழுது மறைக்கிறாள்
  என் மீதான அவளின் காதலை

  மகுடக்கவிதை

  ReplyDelete
 3. கவிதை மழையில் நனைந்தேன்...

  ReplyDelete
 4. ///////
  குறுஞ்சிரிப்புடன் மறுத்திருக்கலாம்
  அவள் மீதான என் காதலை
  குமுறி அழுது மறைக்கிறாள்
  என் மீதான அவளின் காதலை//////

  என்ன ஒரு எதார்த்தம்...

  ReplyDelete
 5. ////
  நானறிந்த ரகசியம்
  அவளின் காதல்
  நானறியா ரகசியம்
  அவள்..//////

  இது நான் ரசித்தது...


  தொடர்ந்து கலக்குங்கள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. திரட்டிகளில் இணைத்துவிடுங்கள் நண்பரே...

  ReplyDelete
 7. குட்டிக் கவிதைகள் அசத்தல்..

  ReplyDelete
 8. சிறிது சிறிதாய்.. முற்றிலும் அருமை என்று சொல்லமுடியாவிடிலும்.. நல்ல கவிதைகள்..

  ReplyDelete
 9. ஏன் ஓட்டுப்பட்டைகள் காணும்.?

  ReplyDelete
 10. அன்பு நன்றிகள் சி பி சார்! :)
  அன்பு நன்றிகள் சௌந்தர்! :)
  அன்பு நன்றிகள் கருன்! :)
  அன்பு நன்றிகள் ராஜா! :)

  அன்பு நன்றிகள் கூர்மதியன்! :)
  எந்த ஓட்டு பட்டைகள்? புரியவில்லை..

  ReplyDelete
 11. அழகிய கவிதைகள்.படங்களும் கவிதைகள்

  ReplyDelete
 12. நான் வேண்டுவது
  கூடை பூக்கள் இல்லை
  அவள் சூடியிருக்கும்
  ஒற்றை ரோஜாவை.. //

  ஒரு ஐந்து ரூபா குடுத்த ஒரு ரோஜா குடுக்க போறாங்க எதுக்கு போய் எதுக்கு avangalai dtb pannikitu :)))

  ReplyDelete
 13. உணவருந்த பிடிக்கா
  ஒரு முழுநிலவு இரவில்
  //

  எப்படி சொல்லியே பின்னாடி போய் புல் காட்டு கட்டவேண்டியது...
  நா ஒன்னுமே சாப்டல,தூக்கம் வரல,அப்டின்னு போய் சொல்ல வேண்டியது.கடவுளே இம்சை தாங்க முடியலப்பா...

  ReplyDelete
 14. மீண்டும் தென்றல், மகிழ்ச்சி.. :)

  சிவா.. நீங்க பண்றது எல்லாம் இங்க எங்களுக்கு டிப்ஸ் குடுக்கறீங்களா?! :)

  ReplyDelete
 15. //நானறிந்த ரகசியம்
  அவளின் காதல்
  நானறியா ரகசியம்
  அவள்..//
  நச்.

  ReplyDelete
 16. //உணவருந்த பிடிக்கா
  ஒரு முழுநிலவு இரவில்
  தின்றுகொண்டிருக்கிறது என்னை
  அவளின் நினைவுகள்.. //
  உன்னதமான சிந்தனை!

  ReplyDelete
 17. நீண்ட நகங்களுக்கு
  நக சாயம் பூசுவது போல
  நான்..
  நீட்டிய ஒற்றை ரோஜாவுக்கு
  நட்பு சாயம் பூசுகிறாள்

  ஆஹா ............
  காதலை
  காதலாய்
  காதலியிடம்
  காதலுடன்
  சொல்லிய வேளையிலே
  காதலை
  நட்பை
  நகர்த்தும்
  நெருடலை
  அழகாய் சொல்லி உள்ளீர்கள்
  அருமை

  ReplyDelete
 18. எல்லாக் கவிதைகளும் மிக மிக அருமை
  படங்களும் அருமை
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. WHERE IS NEXT POST????WHENN...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...