பாட ஒரு மொழியில்லையே
பாவி மக பூஞ்ச்சிரிப்ப
பாக்க ஒரு நாள் போதலையே
பாதகத்தி கொடுத்து வைக்கலையே
அடியே! உன்ன கொல்லனுமே
அப்பனவன் பாக்கும்முன்னே
விடி வெள்ளி வேணுமின்னு
வேண்டி நான் நிக்கையிலே
வேண்டாம வந்துத்தித்த
பெண்ணிலவே.. வெண்ணிலவே..
அம்மான்னு நீ அழைக்குமுன்னே
மண்ணள்ளி போட்டிடவா
இல்ல நெல்லள்ளி போட்டிடவா
நோகாம கொல்லனுமேன்னு
என் நெஞ்சுக்குழி நோகுதடி
பிச்சைக்காரன் வந்து நின்னா
பிடி சோறு போட்டிடுவேன்
பொண்ணா நீ பொறந்ததினால்
பாலாட பாலும் இல்லையடி
ஏடு எடுத்து படிச்சிருந்தா
ஏன்னு ஒரு வார்த்த கேட்டிருப்பேன்
ஐஞ்சு காசு சேர்த்திருந்தா
அஞ்சுகத்த கொஞ்சியிருப்பேன்
வக்கத்த பொம்பளைக்கு
உன்ன வாழவைக்க வழியில்லையே
தங்க வில ஏறுதடி
தங்கமே நீ பொறந்த வேளபாத்து
ஏட்டுகல்வி கூட
எட்டாத விலையிலடி
கட்டிக்க வரவனோ..
கட்டாயம் கேப்பான் வரதட்சன
யார் செய்ஞ்ச தப்பு இது?
ஆண் பெண்ணை ஏசரானே
பொண்ணா நீ பொறக்க
அவனல்லோ காரணமே..
கூட பொறந்தவளும்
கூடி படுத்தவளும்
அவன பெத்தவளும்
அவன் கும்பிடுந் தெய்வமுமே
பொம்பளைக தானே?!
புறந்தள்ளி போறானே
அவன் பெத்த உன்னமட்டும்..
என் அப்பனை பேசறதா?
உன் அப்பனை ஏசறதா?
இல்ல..
சமூகத்த தான் சாடறதா?
சாகாம உன்ன காக்க
ஒத்த வழி எனக்கில்லையே
பொறந்து வளந்து
பொண்ணா நீ பொழைக்கறத்துக்கு
போதுமடி நீ வாழ்ந்த
இந்த ஒரு நிமிசம்..
இங்குமங்கும் அலபாஞ்சி
என்ன போல நீ தொலைக்க
பொண்ணு ஒண்ணு பெத்து
பெருஞ்ச்சோகத்துல அழுவத விட
தேடி வந்த தேவதைய
தெய்வத்திடமே அனுப்பிடறேன்
அசத்தல் கவிதை,,
ReplyDeleteநெஞ்சம் கனக்கச் செய்து போகும் பதிவு
ReplyDeleteஇயலாமையின் கொடுமையையும்
தாய்மையையும் பரிதவிப்பையும்
மிக ஆழமாகச் சொல்லிப்போகிறீர்கள்
தேர்ந்தெடுத்த நடை மிகச் சிறப்பு
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி கருன்!
ReplyDeleteநன்றி ரமணி சார்!
:)
அய்யோ அய்யோ அய்யோ ஆண்டவா....
ReplyDeleteமனோ சார்! ஏன் இப்படி? புரியும்படி சொல்லுங்க தயவுபண்ணி...
ReplyDeleteபரந்த உலகத்தில் இவள் பிறந்து வாழ ஒரு இடமில்லையா?....
ReplyDeleteபகுத்தறிவு கொண்டயென்மம் தன்னையே படைத்தவளை
அளிப்பதுதான் என்ன நியாயம்?.....பொங்கி எழுந்த தங்கள்
மனவலியை அழகிய கவிதையாகச் சித்தரிதுள்ளமை அருமை!.....
வாழ்த்துக்கள்.....
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அம்பாலடியாள்! :)
ReplyDeleteமனமாற்றம் தேவை மனித குலத்துக்கு.வேற என்ன சொல்ல?
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் தோழி! :)
ReplyDelete//அம்மான்னு நீ அழைக்குமுன்னே
ReplyDeleteமண்ணள்ளி போட்டிடவா
இல்ல நெல்லள்ளி போட்டிடவா
நோகாம கொல்லனுமேன்னு
என் நெஞ்சுக்குழி நோகுதடி//
manadhai nerudugiradhu....
chandhan-lakshmi.blogspot.com
அருமையான படைப்பு, வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteமனசை வேதனைப்படுகிறது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரத்னவேல் ஐயா! :)
ReplyDeleteநம்பிக்கை பாண்டியன், உங்கள் பெயரே நம்பிக்கை தருகிறது! தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி! :)
அடிக்கடி வாங்க தனம்! அன்பு நன்றிகள்! :)
மனது வலிக்கும் கவிதை
ReplyDelete