ஒரு நாளைக்கு
எத்தனை முறை சிரிக்கிறாய்?
கேள்வி ஒன்றை படித்தேன்...
யோசித்து பார்த்தபின்
மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்க்க
ம், ஒன்று..
மனம் எண்ண துவங்க..
எத்தனை பயங்கள்
இந்த சிரிப்புக்கு பின்னால்
நட்பு காதலாகி விடுமோ?
கடன் கேட்டு விடுவார்களோ?
பைத்தியம் என்பார்களா?
அர்த்தம்கெட்ட உணர்ச்சியா?
ஆள்மயக்கி என்று அவமதிப்பாகுமோ?
அவமானபட நேருமா?
யோசனை தொடர..
நின்று போனது எண்ணிக்கையும்
சிரிப்பும்... ©
0 கருத்துரைகள்:
Post a Comment