எச்சில் முத்தங்கள்
அளவில்லா நண்பர்களின்
அன்பான விசாரிப்புகள்
படிக்க ஜெயமோகன்
கதைக்க பக்கத்துவீட்டு பாட்டி
மெகந்தி, ரங்கோலி
கோவில் பஜனைகள்
ரோஜா, மல்லி, முல்லை
வாசம் நிறைந்த தோட்டம்
மொட்டை மாடி, நிலா
சப்தமில்லா இரவு
போகோ, கார்ட்டூன்
ஓவியங்கள், கவிதைகள்
தியானம், யோகா
இளையராஜா, அகோன்..
உனக்கே உனக்கென்று
அழகு குறிப்புகள்
உன் சமையலறையின்
அமெச்சூர் குலோப்ஜாமூன்கள்
ஊர்சுற்ற ஸ்கூட்டி
உலகம் சுற்ற நெட்வொர்க்
ஒரு குட்டி தூக்கம்
லேசாய் ஒரு நடைப்பயிற்சி
சற்றும் யோசிக்காத
சந்தோஷ சிரிப்புகள்
சட்டென்று கோவம் வந்தாலும்
அதே வேகத்தில் மறந்து...
படுத்துறங்கும் வேளையில்
கரடி பொம்மை
மேலும் நிறைய பொம்மைகள்
விதவிதமான பெயர்களில்
இப்படி ஏதாவது.. உனக்கென்று இருக்கிறது
என்னை மறந்ததாய் நடிப்பதற்கு
ஆனால்...
எனக்கென்று இருப்பது
நீ மட்டும் தான்
உன் பக்கத்தில்
என்னையும் வைத்துக் கொள்ளேன்
ஒரு பொம்மையாகவேனும்! ©
howsome nothing to say,
ReplyDelete