அழகி :)
ஒருபின்னல் அவிழ்ந்து
கண்களில் மை கரைந்து
கன்னகுழிகளில் அது
வானவில்லாய் நீட்டி நிற்க
மீசைபோல் வேர்வை
உதட்டின் மேலே
அதற்கும் சற்று உயரத்தில்
மூக்கின்மீது கோவம்
அப்பாவின் பனியன்
ஆடையாய் ஆகி இருக்க
ஒரு கையில் பம்பரம்
மறுகையில் கோலிகுண்டு
திட்டிக்கொண்டு இருக்கிறாள்
விளையாட்டு தோழனை
ஏமாற்றிவிட்டான் அவன் என்று
அம்மா காலையில் வைத்தனுப்பிய
வாசம் மிக்க பூக்கள்
ஐயனார் குதிரை மேல்
அதனடியில் அவளின் குட்டிபாப்பா
அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்க
கையில் இருப்பதை
வீசி எறிந்துவிட்டு
வேகமாய் கல்யானை மேல்
அமர்ந்து கொண்டபின்
பரபரக்கும் அவளின்
குண்டுகுண்டு விழிகள்
ஏமாற்றத்தை எண்ணி பார்த்தபடி
சோர்ந்து போய்
அவள் முகம் திருப்பும்
கடைசி வினாடியில்
தோழர்கள் அழைக்க
எல்லாம் உடனே மறந்து
மீண்டும் அவள்
விளையாட ஆரம்பிக்கிறாள்
எங்கிருந்தோ அம்மா
அழைத்துக்கொண்டே இருக்கிறாள்..
போதும் இந்த விளையாட்டென்று! ©
0 கருத்துரைகள்:
Post a Comment