நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

18 August 2011

இரவும் நிலவும் நீயும்

கண்களில் 
தூக்கமும்
கனவுகளும்
நிரம்பி வழிய
சட்டென வந்த 
உன் நினைவினால் 
நானும் கலைந்துவிட்டேன்  

இரவெல்லாம் கண்விழித்து
முடிவில் கண்டுபிடித்தேன்
உறக்கம் கலைவது
உன்னால் மட்டுமே என்று 

13 August 2011

நீ சிணுங்குகிறாய் காதலியாய்

உன்னை வரையும் போது
சிலிர்த்து நிற்கிறது தூரிகையும்
ஓவியமாய் நீ இருந்தாலும்
பேசமறந்து நிற்பது நானேகாதலுடன் பார்க்கிறேன்
என்னை நானே 
கண்ணாடியிலும்
உன் கண்களிலும்

நீ கடித்து 
பாதி தந்ததால் 
சிவந்து போனது 
கொய்யாப்பழம்

நீ அழைக்கும் போதுமட்டும்
காதலாய் சிணுங்குது கைபேசி
அழைப்பை ஏற்றபின்
காதலுடன் சிணுங்குகிறாய் நீ
   
சிறு வயதில் 
பள்ளிகூட வாசலில் 
அம்மா காத்திருந்திருப்பாள் 
உன் வருகைக்காய்
கல்லூரி வாசலில் 
காத்திருக்கிறேன் நான் 
உனக்கே உனக்கென 
இன்னுமொரு அம்மாவாய்

புத்தகம் பேனா பென்சில்
எல்லாம் தொலைத்தது போல
என் இதயத்தையும்  தொலைத்துவிடாதே
எங்கேனும் பத்திரப்படுத்தி வை
மைனாக்களை ரசிக்கிறேன் என்று
மையிட்ட கண்களினால் 
முறைத்தபடி நிற்கிறாள்  
என் முன்னே
இறகுகளை ரசிக்கட்டுமா
இல்லை
இமைக்கவும் மறந்து  
இவளை ரசிக்கட்டுமா?!

04 August 2011

பிரிவுக்கு ஓர் ஒத்திகை


பிரிவுக்கு ஒத்திகை பார்க்கிறாய்
நிஜமெனவே அழ துவங்குகிறேன்
செய்வதறியாது திகைக்கிறாய்
மென்மையாய் அணைத்து பின் 
சிறுகுழந்தையை சமாளிக்கும் தாயெனவே 
மெல்லிய குரலில் சொல்கிறாய் 
என்னையும் அழைத்து போவதாய்
நம்பி சிரிக்கட்டுமா?
இல்லை நம்பாமல் அழட்டுமா?!

03 August 2011

காதல் பேசேன்


******************************************************

ஏதாவது சொல்
எதிர்பாராத நேரத்தில் சொல்
ஆனால்
நான் எதிர்பார்ப்பதை சொல்

"KISS ME or KILL ME"
"MISS ME or MARRY ME"
"LOVE ME or LEAVE ME"
BUT never ever say "FORGET ME
******************************************************

பெண்ணே! உன் மீது கொண்ட காதலால்..

சிட்டு குருவி ஒன்று 
தினமும் நீ குளிக்கையில்
எட்டிஎட்டி பார்த்து போகிறது 
ரசித்து சிரிக்கிறாய் அதற்காக
எதிர்வரும் பெண்களை
நான் ஏறிட்டு பார்த்தாலே 
ஏன் இப்படி கோபப்படுகிறாய்?
வேறு வேறு நியாயங்களா 
உனக்கும் எனக்கும்..!

மீசைக்குள் ஒளித்து வைக்கிறேன்
என் கோபங்களையெல்லாம்
எல்லாம் வெளிப்படுகின்றன
முத்தங்களாய் உன் முன்னே

கூட்டத்திலும் பேசாதவன்
தனிமையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்
பெண்ணே! உன் மீது கொண்ட காதலால்.. 

பள்ளியிலும் கல்லூரியிலும்
படிக்காமல் சுற்றிதிரிந்தவனை
இரக்கமின்றி படிக்கவைக்கிறாய்
இரவு பகலாய்
அப்போது போலவே
இப்போதும் தோற்கிறேன்
உன் இதயத்தை படிக்கமுயன்று..

உனக்கெனவே வாங்குகிறேன் 
கரடி பொம்மைகளை 
ஆனால்.. பொறாமையோடுRelated Posts Plugin for WordPress, Blogger...