மிக நீண்ட பயணங்கள்
உன்நினைவுகளை மேலும்
நீடித்துக்கொண்டிருக்கும் வேளை யில்
வேகமாய் பின்னோக்கி நகரும்
மரங்கள் எல்லாம்
நம் காதல் கணங்கள்
தொலைந்ததையே நினைவூட்ட
திடீர் மழை போல்
கண்ணிமைகள் நனைத்து
வெளியேறும் நீர்த்துளிகளில்
மனதின் பாரம் குறைய...
மண்வாசம் போல்
உன்வாசம் என்மேலெங்கும்
நம் பெயர்கள் கிறுக்கிவைத்திருக்கும்
உள்ளங்கை மெல்ல குறுகுறுக்க..
சிறுநகை எட்டிபார்க்கிறது..
அழுகையுடன் நான் சிரிப்பதை
ஐயோ! நீ பார்த்துவிட்டால்?
கேலிசெய்து நீயுமல்லவா
சேர்ந்து சிரிப்பாய்...
நான்..
தொலைத்துவிட்ட சிரிப்பை
இப்போதாவது கொடுத்துவிடு..©
0 கருத்துரைகள்:
Post a Comment