கண்ணீர் நனையாத இமைகள்
கனவுகள் இல்லாத உறக்கம்
உணவூட்ட தாயாய் நீ
ஓய்ந்து தலை சாய உன்மடி
தலை கோத உன் விரல்கள்
மெல்லிய உன் இதயத்தின் ஓசை
மென்மையாய் முத்தமிடும் இதழ்கள்
பாதுகாப்பான கை அணைப்பு
நெஞ்சத்தின் வாசனையான வெப்பம்
தென்றலான உன் நெருக்கம்
ஒரு அருமையான மழைகாலம்
இடைவிடாத உன் காதல்
உனக்கான என் ஏக்கங்கள் என்றும் தீராது... ©
0 கருத்துரைகள்:
Post a Comment