ஏங்கி ஏங்கி சேரும் இதயங்கள்
காத்திருந்து சேரும் உதடுகள்
காணாமல் போகும் கோபங்கள்
காதலில் எல்லாமே சுகம்தான்
சிரிப்பதற்கு யாரோ சொல்லும்
சிரிப்பதற்கு யாரோ சொல்லும்
ஏதாவது ஒரு வார்த்தை போதும்
சந்தோஷ பட வைக்க
நீ... நீ மட்டுமே வேண்டும்!
கண்ணீரின் கரைகளை துடைக்க
உன் உதடுகள் போதும்
உன்கைகளின் இறுக்கத்தில்
நானிருக்கையில் எதுவும் பயமில்லை
உன்னை பிரிகையில் மட்டுமே
அத்தனை ஏக்கங்கள் ஏமாற்றங்கள்
வேதனைகள் பயங்கள்
துடிப்புகள் எல்லாமுமே...
என் கைகளை விட்டு பிரிந்தாலும்
நினைக்க மறந்து விடாதே
உனக்கான என் வார்த்தைகளை
மையில் நனைத்து எழுதவில்லை
கண்ணீரில் நனைத்து
காதலில் எழுதுகிறேன்.. ©
0 கருத்துரைகள்:
Post a Comment