நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

07 May 2011

அவளின் உலகம்




அவளுக்கென்று ஒரு கவிதை
அன்னையர் தினத்துக்காய் எழுதி
பெருமை பொங்க நீட்டியபோது
மென்மையாய் சிரித்தபடி சொல்கிறாள்
எந்த ஒரு கவிதையும் 
அவ்வளவு அழகில்லை
முதல் முதலாய் நீ
'அம்மா' என்று அழைத்ததை விட.. 
எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட 
கவிதை அவள்


"உனக்கு எதுவும் புரியாது.."
நான் முறைத்த வேளையிலும்
என்னை முழுதாய் புரிந்தவள்..


பெரும்பாலான என் தவறுகள்
தவிர்க்க படுகின்றன..
இன்னமும் என்னை குழந்தையாகவே
நினைத்துக்கொண்டிருக்கும் அவளால்.. 


நான் கைவிட்டாலும்
எனக்காய் கண்ணீர் விடுபவள்



உலகம் முழுதும் நான் சுற்றினாலும்
அவளின் உலகம் நான் மட்டுமே


அவள் புன்னகைக்க
ஓராயிரம் பரிசுகள் வேண்டாம்
நான் மட்டுமே போதும்.. 


16 comments:

  1. கவிதைகள் அனைத்தும் அருமை . உங்களுக்கு எனது அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. >>அவள் புன்னகைக்க
    ஓராயிரம் பரிசுகள் வேண்டாம்
    நான் மட்டுமே போதும்..

    நச் லைன்ஸ்

    ReplyDelete
  3. நன்றி சங்கர்! :)

    நன்றி சி.பி. சார்! :)

    ReplyDelete
  4. அழகான கவிதை! படங்களும் கவிதை!

    ReplyDelete
  5. படங்களும் பதிவும் மிக அருமை
    நீங்கள் குறிப்பிட்டுப்பதைப்போல
    அம்மா என்கிற ஒரு சொல்லுக்குள்
    கவிதைகள் ஆயிரம் அடக்கம்
    அருமையான சிந்தனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட
    கவிதை அவள்//

    வார்த்தைகள் பிரயோகம் ரசிக்க வைக்கிறது...

    கவிதை அம்மாவைப் போலவே....
    படங்கள் கவிதையைப் போலவே...

    ReplyDelete
  7. அம்மா என்றாலே கவிதைதான் இல்லையா....

    ReplyDelete
  8. உங்களுக்கு எனது "அன்னையர் தின" வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. //எந்த ஒரு கவிதையும்
    அவ்வளவு அழகில்லை
    முதல் முதலாய் நீ
    'அம்மா' என்று அழைத்ததை விட..
    எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட
    கவிதை அவள்///

    ஓ சூப்பர்......

    ReplyDelete
  10. //இன்னமும் என்னை குழந்தையாகவே
    நினைத்துக்கொண்டிருக்கும் அவளால்.. //

    அம்மான்னா சும்மா இல்லே....

    ReplyDelete
  11. //அவள் புன்னகைக்க
    ஓராயிரம் பரிசுகள் வேண்டாம்
    நான் மட்டுமே போதும்..///


    ம்ம்ம்ம் அசத்திட்டீங்க போங்க.....

    ReplyDelete
  12. போட்டோக்களும் கவிதையா இருக்கு.....

    ReplyDelete
  13. நன்றி மனோ சார்!

    நன்றி தென்றல்!

    நன்றி ரமணி சார்!

    நன்றி சிசு!

    :)

    ReplyDelete
  14. கவிதையை ரசிப்பதா, படங்களை ரசிப்பதா? அருமை,அருமை, அத்தனையும் அருமை!

    ReplyDelete
  15. "எந்த ஒரு கவிதையும்
    அவ்வளவு அழகில்லை
    முதல் முதலாய் நீ
    'அம்மா' என்று அழைத்ததை விட"....

    மறுக்க, மறைக்க முடியாத உண்மைகள்... வார்த்தைகள் அனைத்தும் மிக அழகு நம் அன்னையின் மனது மாதிரி....
    வாழ்த்துக்கள் தோழி.....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...