நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

23 May 2011

காணமல் போன அன்று அவன்..


நேற்றுமுதல் காணவில்லை 
சிறு சண்டையினால் தொலைந்துவிட்டான் 

தொலைந்த அவனால்
உறக்கம் தொலைக்கிறேன்
உணவு மறக்கிறேன்
கனவுகளும் வரவில்லை
கவிதைகளும் எழுதவில்லை
தொடுத்த பூக்களாய் 
தொடருது அவன் நினைவுகளே

கண்டுபிடிப்போருக்கு பரிசு உண்டு
ஆனால்..
கேட்டுவிடாதீர்கள் பரிசாய் அவனையே 

அங்க அடையாளங்கள் சொல்கிறேன்
அழகானவன் அவன் 
காணமல் போனது 
நீல நிற சட்டையிலே 

குழந்தை தலைமுடி 
கொஞ்சம் மட்டுமே தலையில் 
அப்பளபூ நெற்றியை 
அடிக்கடி சுருக்குவான்
சிறுபருப்பு கண்கள்
குறுகுறுவென பார்க்கும் 

மிளகாய்பழ மூக்கு
மேலும் சிவக்கும் கோவத்திலே 
அரிந்த மாங்காய் போல் மீசையோ 
குத்தும் முத்தம் குடுக்கையிலே  
கால் படி கழுத்து
திரும்பும் பெண்களை பார்த்ததுமே  

புல் முளைத்த மார்பு
கரடிபொம்மை போலிருக்கும்
கைகால் முளைத்த 
நீண்ட மரம் போல 
நெடுநெடுவென இருப்பான்
வாத்து மிதப்பது நீரில்
இவன் நடப்பது நிலத்தில் 

இன்னும் சொல்லலாம்தான்
ம்ம்..
நீங்களுமே அவனை விரும்பிவிட்டால்?!

அவன்.. 
கணக்கிலே புலி
கவிதையிலே வாலி
எங்கேனும் மறைந்திருந்து
எழுதக்கூடும் ஒரு கவிதை
என்னை திட்டியாவது

தொலைவது போல் நடித்து 
தூரத்தில் ரசித்திருப்பான்
ன்னுடைய தவிப்புகளை..
பொல்லாத காதல்
'போடா' என்று சொல்லிவிடலாம்
ஆனால்..
விளையாட்டு இன்னும் முடியவில்லையே 


28 comments:

  1. கவிதை கவிதை அருமை அருமை....!!!

    ReplyDelete
  2. நல்ல வெளையாட்டு...

    ReplyDelete
  3. >>பொல்லாத காதல்
    'போடா' என்று சொல்லிவிடலாம்
    ஆனால்..
    விளையாட்டு இன்னும் முடியவில்லையே


    ஹா ஹா செம

    ReplyDelete
  4. >>
    அவன்..
    கணக்கிலே புலி

    ஹா ஹா அதான் உங்களை கணக்கு பண்ணிட்டாரு ஹா ஹா

    ReplyDelete
  5. >>வாத்து மிதப்பது நீரில்
    இவன் நடப்பது நிலத்தில்

    எனக்கென்னவோ காதலனை உங்கள் மனம் புரிந்துகொள்ளாத வாத்து மடையர் என அழைக்கிறீர்களோ என டவுட் ஹா ஹா

    ReplyDelete
  6. வாங்க மனோ சார்! :)

    @ சிசு
    விளையாட்டுகள் எப்போதுமே விறுவிறுப்பானவை :)

    சி.பி. சார், புலி எப்போவாவது கணக்கு போட்டு பார்த்து இருக்கீங்களா? அது ஒரு சாப்பாட்டு ராமன்.. ஒரு நல்ல dietitian தான் அதுக்கு ஜோடியா இருக்க முடியும்.. ஓவரா நான் வெஜ் சாப்பிடுது இல்ல.. :)

    ReplyDelete
  7. ஊடலும் அதிலோர் கூடலும்தன் காதல்...
    உன் வார்த்தையின் ஊடே ரசிக்கிறேன் அவனை (பி. கு: ரசிக்க மட்டும்தான் செய்கிறேன்)
    வார்த்தை விரயம் இல்லாமல் ரசித்திருக்கிறாய் அவனை..
    அருமை..இதை மட்டும்தான் என்னால் சொல்லமுடியும்...நிச்சயமாக நன் அவனை கண்டுபிடிக்க மாட்டேன்
    கண்டுபிடித்தல் அவனை நானே கொண்டுசொல்வேனோ என மனம் பதைக்கிறது...

    ReplyDelete
  8. அருண்.. கல கல கலாட்டா கருத்தா சொல்லி இருக்கீங்க :)
    நன்றி!

    ReplyDelete
  9. தொலைவது போல் நடித்து
    தூரத்தில் ரசித்திருப்பான்
    என்னுடைய தவிப்புகளை..>>>>

    நல்ல கவிதை...

    எனது வலைப்பூவில்:
    மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

    ReplyDelete
  10. நேற்றுமுதல் காணவில்லை
    சிறு சண்டையினால் தொலைந்துவிட்டான்//

    அதுக்கு பெயர் தொலைவதா இல்லை ஓடுவதா.?

    ReplyDelete
  11. கவிதைகளும் எழுதவில்லை//

    ஓ இத நான் கவிதைனு நினச்சு படிச்சிட்டேன்.. சாரி.. ஹி ஹி

    ReplyDelete
  12. தொடுத்த பூக்களாய்
    தொடருது அவன் நினைவுகளே//

    இல்லை.. உவமை சரியில்லை..

    ReplyDelete
  13. கண்டுபிடிப்போருக்கு பரிசு உண்டு
    ஆனால்..
    கேட்டுவிடாதீர்கள் பரிசாய் அவனையே //

    அவர வச்சுகிட்டு நான் என்ன செய்ய.? நீங்களே வச்சிகிடுங்க..

    ReplyDelete
  14. காணமல் போனது
    நீல நிற சட்டையிலே //

    இல்லங்க.. இதில் அர்த்தம் எப்படி விளங்குதுனா.. நீல நிற சட்டைக்குள்ள அவரு காணாம போனதா விளங்குது.. ஆனா நீங்க சொல்ல வர்றது நீல நிற சட்டை போட்டிருக்கும் போது அவர் காணாமல் போனதாக..

    ReplyDelete
  15. அப்பளபூ நெற்றியை
    அடிக்கடி சுருக்குவான்//

    ஆஹா.. ரசனை ரசனை..

    ReplyDelete
  16. வாத்து மிதப்பது நீரில்
    இவன் நடப்பது நிலத்தில் //

    இது என்ன டி.ஆர்., மாதிரி சம்பந்தமே இல்லாம..

    ReplyDelete
  17. விளையாட்டு இன்னும் முடியவில்லையே//

    ம்ம்.. முடியாது முடியாது.. சிறப்பு.. கொஞ்சம் தடுக்கிட்ட சிறப்பு..

    ReplyDelete
  18. காணமல் போனது //

    எழுத்து பிழை..

    ReplyDelete
  19. முதலில் அந்த படத்தை பார்த்துவிட்டு கவிதைகளை படிக்க தொடங்கியபோது அழகிய ஒரு சிறிய குழந்தையின் விளையாட்டை விவரிக்கின்றீர் என ஆவலாக ஆனேன்.. ஆனால் போக போக அது உங்களவரை பற்றிய கவிதை என புலப்பட்டது.. சிறப்பு..

    ReplyDelete
  20. மிக அருமை.உண்மையான உணர்வுகள் அழகு

    ReplyDelete
  21. தங்கள் வருகைக்கும், இனிமையான விளக்கங்களுக்கும் நன்றி கூர்மதியன்!
    இது பொதுவில் எழுதப்பட்டது.. எல்லா கவிதைகளுக்கும் எழுதுகிறவரின் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை.
    அடிக்கடி வாருங்கள் :)

    ReplyDelete
  22. தங்கள் வருகைக்கு நன்றி மீனு! :)

    தங்கள் வருகைக்கு நன்றி பிரகாஷ்! :)

    ReplyDelete
  23. அன்பு நன்றிகள் லிங்கம் சார்! :)

    ReplyDelete
  24. ஃஃஃஃஃகண்டுபிடிப்போருக்கு பரிசு உண்டு
    ஆனால்..
    கேட்டுவிடாதீர்கள் பரிசாய் அவனையேஃஃஃஃஃ

    அடடா இப்படி ஒரு சூட்சும வரிய ரொம்ப அருமைங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

    ReplyDelete
  25. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் அன்பு நன்றிகள் மதி சுதா! :)

    ReplyDelete
  26. மச்சி கண்டு பிடிச்சு குடுக்கறேன்
    ஆனா எனக்கு டீ வடை வாங்கி தரனும் சரியா?:)

    அழகான கற்பனை லாலி

    ReplyDelete
  27. ஊடலில் வந்து விழும் வார்த்தைகளும் இனிமையாய்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...