நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

17 May 2011

காகித முத்தங்கள்


உனது தேவையாய் நானும்
எனது தேவையாய் நீயும் 
எப்போதுமே இருக்கிறோம்
நமது தேவைகளின் பட்டியலில் 
இறுதியில் இருக்கும் வரி(லி)யில் 

உன் முகம் தொலைத்தப்பின் 
முகவரி சொல்ல ஒரு வீடு
நமக்கே நமக்காய்
முற்றத்தில் இருக்கும் 
தனி ஒரு ஓவியமாய் நான் 

எப்போதும் இணைந்திருப்போம்
திருமண உறுதிமொழியால் 
இணையத்திலாவது இணைந்திருக்கிறோம்
தினம் ஒரு மணி நேரம்
உறக்கம் தொலைத்தாவது 

உன் முத்தங்களை 
சுமந்தது வரும் காகிதங்கள் 
என் முத்தங்களில் நனையவில்லை 
கண்ணீரில் கவிழ்ந்து போகின்றன 
காகித கப்பல்களாய் 

உன் விடியல் நேரம் வேறு 
என் விடியல் நேரம் வேறு 
என்றாலும்.. 
இரவின் வேதனைகள்
இருவருக்கும் ஒன்று போலவே 

தும்மலும் இருமலும் 
தூரத்திலிருக்கும் உன் நினைவால்  
துணி துவைக்கையிலும்
உன் நினைவுகள் 
என்னை துவைத்தபடி

நம் உரையாடல்களில்
மௌனமாய் சில நிமிடங்கள்
அங்கு உன் கவலைக்காகவும் 
இங்கு என் கண்ணீருக்காகவும்  
உணர்ந்துருகும் தொலைபேசி

இருபதில் செய்த திருமணம் 
பிரித்து வைத்தது நம்மை 
அறுபதில் செய்யும் திருமணமாவது
பிரியாமல் வைத்திருக்குமா நம்மை? 
அலாதியான கற்பனைகள்.. 

உறையும் பனியின் பின்னணியில்
நானில்லா உன் புகைப்படங்களை 
எனக்காய் அனுப்பி வைக்கிறாய்
எரிக்கும் வெயிலில் 
புகைந்து போகிறேன் நான் 

கடல்கடந்து சென்று நீ 
பணம் சேர்ப்பது போல்
கண்ணீர் கடந்து சென்று 
காதலை சேர்த்து வைக்கிறேன்
வயோதிகத்தின் எல்லையிலாவது சந்திப்போம்   

சில கவிதைகள் மட்டும்
முடிவதே இல்லை


24 comments:

 1. எப்போதும் இணைந்திருப்போம்
  திருமண உறுதிமொழியால்
  இணையத்திலாவது இணைந்திருக்கிறோம்
  தினம் ஒரு மணி நேரம்
  உறக்கம் தொலைத்தாவது

  வலி நிறைந்த வரிகள்

  ReplyDelete
 2. உன் முத்தங்களை
  சுமந்தது வரும் காகிதங்கள்
  என் முத்தங்களில் நனையவில்லை
  கண்ணீரில் கவிழ்ந்து போகின்றன
  காகித கப்பல்களாய்

  கண்ணீர் சுமக்கும் பிரிவின் வலி சொல்லும் வரிகள்

  ReplyDelete
 3. இருபதில் செய்த திருமணம்
  பிரித்து வைத்தது நம்மை
  அறுபதில் செய்யும் திருமணமாவது
  பிரியாமல் வைத்திருக்குமா நம்மை?
  அலாதியான கற்பனைகள்..

  பிரிந்து வாழும் உறவுகளின் காதல் நிறைந்த வரிகள்

  ReplyDelete
 4. கடல்கடந்து சென்று நீ
  பணம் சேர்ப்பது போல்
  கண்ணீர் கடந்து சென்று
  காதலை சேர்த்து வைக்கிறேன்
  வயோதிகத்தின் எல்லையிலாவது சந்திப்போம்

  சில கவிதைகள் மட்டும்
  முடிவதே இல்லை

  அழகான உணர்வுகளின் காதல் ஏக்கம் நிறைந்த கவிதை..அருமை..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ரேவா! :)

  ReplyDelete
 6. வழக்கம் போல அசத்தல் கவிதைகள்.. சகோ நம்ம கடை பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே..

  ReplyDelete
 7. அலாதியான கற்பனைகள்.. //

  சில கவிதைகள் மட்டும்
  முடிவதே இல்லை//
  அருமையான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. கருன்! இப்போதுதான் வந்து சென்றேன் ஆனந்திக்காய் .. :)

  நன்றி ராஜி! :)

  ReplyDelete
 9. முடியாது தொடர்கின்றன
  சில கவிதைகள் மட்டும் அல்ல
  அதை படித்து முடித்தவுடன்
  நம்முள் ஏறிய கனத்த சோகச் சுமைகள் கூட..
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. நன்றி ரமணி அண்ணா!

  ReplyDelete
 11. வலிகளின் வார்த்தைகள் வரிகளின் கோர்வையாய்...
  பிரிந்தினைந்து இருக்கும் ஈருயிரின் ஓர் மடலாய் உனதின் " காகித முத்தங்கள்"

  ReplyDelete
 12. //இருபதில் செய்த திருமணம்
  பிரித்து வைத்தது நம்மை
  அறுபதில் செய்யும் திருமணமாவது
  பிரியாமல் வைத்திருக்குமா நம்மை?
  அலாதியான கற்பனைகள்.. //

  சூப்பர்......

  ReplyDelete
 13. நன்றி அருண் உங்கள் அழகான வாழ்த்திற்கு! :)

  ReplyDelete
 14. சில கவிதைகள் மட்டும்
  முடிவதே இல்லை..........

  அருமை ... வரிகள் ஒவ்வொன்றும் அருமை...

  ReplyDelete
 15. ////////உறையும் பனியின் பின்னணியில்
  நானில்லா உன் புகைப்படங்களை
  எனக்காய் அனுப்பி வைக்கிறாய்
  எரிக்கும் வெயிலில்
  புகைந்து போகிறேன் நான்
  ////////

  எத்தனை அழகான உணர்வுகள் அழகாய் வடித்திருக்கிறீர்கள் கவிதையில் . அருமை பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 16. சமீப காலங்களில் நான் படித்த 500 கவிதைகளில் டாப் கவிதை இது

  ReplyDelete
 17. >>
  உனது தேவையாய் நானும்
  எனது தேவையாய் நீயும்
  எப்போதுமே இருக்கிறோம்

  அழகிய ஹைக்கூ

  ReplyDelete
 18. >>உன் விடியல் நேரம் வேறு
  என் விடியல் நேரம் வேறு
  என்றாலும்..
  இரவின் வேதனைகள்
  இருவருக்கும் ஒன்று போலவே

  வலிகளை வார்த்தைகளில் வார்ப்பது எப்படி என்பதை உணர்ந்தேன்

  ReplyDelete
 19. >>
  கடல்கடந்து சென்று நீ
  பணம் சேர்ப்பது போல்
  கண்ணீர் கடந்து சென்று
  காதலை சேர்த்து வைக்கிறேன்

  பணம் சேர்ப்பது ஆணின் குணம்,மனம் சேரத்துடிப்பது பெண்ணின் குணம்

  >>வயோதிகத்தின் எல்லையிலாவது சந்திப்போம்

  செம லைன்..  >>>சில கவிதைகள் மட்டும்
  முடிவதே இல்லை

  மகுட வரிகள்

  ReplyDelete
 20. தங்கள் வருகைக்கும் அருமையான புரிதலுக்கும் மிக்க நன்றி சி.பி. சார்! :)

  தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் அன்பு நன்றிகள் சங்கர் சார் ! :)

  @வேங்கை தங்கள் வருகைக்கு நன்றி நட்பு!

  ReplyDelete
 21. //உறையும் பனியின் பின்னணியில்
  நானில்லா உன் புகைப்படங்களை
  எனக்காய் அனுப்பி வைக்கிறாய்//

  இந்த வலியை/உன்மையை நிறைய பேர் அனுபவச்சிருப்பாங்க,

  மனம் கணக்கும் கவிதை

  ReplyDelete
 22. //உறையும் பனியின் பின்னணியில்
  நானில்லா உன் புகைப்படங்களை
  எனக்காய் அனுப்பி வைக்கிறாய்
  எரிக்கும் வெயிலில்
  புகைந்து போகிறேன் நான்//
  புகை படங்கள் இங்கே புகையை வரவழைத்துள்ளன. வலிகள் வார்த்தைகளில் வடிவெடுத்துள்ளன. அருமையான வெளிப்பாடு.

  ReplyDelete
 23. கவிதை காகித முத்தம் நன்று

  ReplyDelete
 24. @ Food
  தொடர் வருகைக்கு நன்றி சார்! :)

  @ tamil444news.blogspot.com
  தங்கள் வருகைக்கு நன்றி நட்பு!

  @ MANO நாஞ்சில் மனோ
  நன்றி மனோ சார்!

  @ thirumathi bs sridhar
  நன்றி தோழி! தொடர்ந்து வாங்க!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...