நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

06 May 2011

நம் சண்டைகளின் நடுவே


முகத்திரைகள் கிழிபடுகின்ற
நம் சண்டைகளின் நடுவே
என் சொந்தங்களை நீயும்
உன் சொந்தங்களை நானும்
குற்றம் சொல்லி குறைகள் சொல்லி
குத்தி பேசி கத்தி பேசி 
சப்தமிட்டு ஓய்ந்தபின் 
இறைந்து கிடக்கும் 
வார்த்தைகளின் நடுவில் 
இறுதியாய் எஞ்சியது 
நீயும் நானும் மட்டுமே..


6 comments:

 1. உண்மையான வார்த்தைகள்..
  வாழக்கையின் எதார்த்தம் அப்படியே கவிதையில்

  குழைந்தைகளுக்கு தெரியாது பெரிவர்களின் பகை...

  ReplyDelete
 2. சௌந்தர் தங்கள் பதிவிற்கு நன்றி! இது ஒரு கணவன் மனைவி இடையே நடக்கும் நிகழ்வை பற்றியது..

  ReplyDelete
 3. >>என் சொந்தங்களை நீயும்
  உன் சொந்தங்களை நானும்
  குற்றம் சொல்லி குறைகள் சொல்லி

  எல்லார் வீட்லயும் இதே கதை தானா? ஹா ஹா அப்பாடா.. திருப்தி.. (என்ன ஒரு குரூர திருப்ய்தி..)

  ReplyDelete
 4. ரொம்ப சந்தோசம் சி.பி. சார்! :) வேற என்ன சொல்ல.. :)

  ReplyDelete
 5. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...