நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

24 May 2011

பொறுப்பில்லா பையன், பிடிக்கல..
படிக்க தெரியுமா பத்திரிக்கைகளை?
வடிக்க தெரியும் சாதத்தை 
மேடைகளில் பேசியதுண்டா?
கடவுள் முன் பாடியதுண்டு
நண்பர்கள் தோழிகள் என்று...?
அம்மாவும் தங்கையும் மட்டுமே 

பெண் விடுதலை பற்றி?
பெரிய கருத்து எதுவுமில்லை
அரசியல் பற்றிய அலசல்கள்..?
துணி அலச தெரியும் 
கிரிக்கெட் பார்ப்பதுண்டா?
எப்போதும் இல்லை

வலைதளத்தில் பதிவுகள் என்று?
நேரமிருந்தது இல்லை 
கவிதைகள் கட்டுரைகள்..?
கோலம் போடுவேன் நன்றாய்
பங்கு சந்தையில் ஈடுபாடு?
தபால் அலுவலகம் தாண்டியதில்லை 
கிரெடிட் கார்டு?
வரவுக்குள் செலவு செய்வேன்


ஆங்கில படங்கள் பார்த்ததுண்டா?
தமிழில் சில படங்கள் பார்த்ததுண்டு 
பந்தயங்கள் கட்டியதுண்டா?
பார்த்தது கூட இல்லை
பார்ட்டி டான்ஸ் என்று..?
நான்காம் வகுப்பில் பரதநாட்டியம்..
கைபேசி..?
அவரசத்திற்கு மட்டுமே.. 

அலுவலகத்தின் வருமானம்?
அம்மாவிடம் கொடுத்துவிடுவேன் 
வேறு விருப்பங்கள்?
தோட்டம், தியானம், எளியவருக்குதவி  
கோவம் வருமா?
அடிக்கடி கிடையாது
உன் அம்மா, அப்பா..?
தெய்வங்கள்..
என் அம்மா, அப்பா பற்றி?
தெய்வத்தினும் மேலான தெய்வங்கள்

என்னை பற்றி உன் கருத்து?
.......................... (மௌனம்) 
என்னுடைய விருப்பங்கள் ஏதுமில்லை உன்னிடம் 
சரி... பரவாயில்லை 
உனக்கு ஏதாவது கேட்க வேண்டுமா?
எனக்கு தெரிந்தது ஏதாவது உங்களுக்கு..?
.......................... (தெரியாது என்ற மௌனம்)

இனிதே முடிந்தது
பெண் பார்க்கும் படலம்
பையனிடம் அம்மா பதில் கேட்க
"பிடிச்சிருக்கு.. பொறுப்பான பொண்ணு"
பெண்ணிடம் அம்மா கேட்க..
"பொறுப்பில்லா பையன், பிடிக்கல" 

27 comments:

 1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.  Share

  ReplyDelete
 2. பொறுப்பில்லா பையன், பிடிக்கல..

  ReplyDelete
 3. நன்றி சரவணன்!

  நன்றி கருன்!

  நன்றி மனோ சார்!

  நன்றி சதீஷ் சார்!

  நன்றி ராஜி!

  :)

  ReplyDelete
 4. சமூகத்தின் சாட்டையடி...

  ReplyDelete
 5. ஆனால் பெரும்பாலான பெண்களிடம் பிடித்திருக்கா என்று கேட்பதில்லை...


  பெண்பார்க்கும் படலம் யாதார்த்தின் உச்சம்..
  இயல்பின் மிச்சம்..
  நன்றி...

  ReplyDelete
 6. தங்கள் கருத்துக்கு அன்பு நன்றிகள் சௌந்தர்! :)

  ReplyDelete
 7. ஹா ஹா செம காமெடி.. மாப்பிள்ளை கூட கடலை போட்டதையே ஒரு பதிவாக்கீட்டீங்களே?

  ReplyDelete
 8. இதனால் சகலமான பேச்சிலர்சூக்கும் சொல்லப்படும் தகவல் என்னான்னா பொண்ணூ பார்க்க போங்க ஆனா பொண்ணூ கூட தனியா போய் பேசர வேலை மட்டும் வேணாம் ஹா ஹா #வார்னிங்காலஜி

  ReplyDelete
 9. ஹா.. ஹா.. ஹா.. ஹா..

  ReplyDelete
 10. சி பி சார், பசங்கள ரொம்ப பயமுறுத்தாதீங்க! :)

  ReplyDelete
 11. @ சி.பி.செந்தில்குமார் said...

  #வார்னிங்காலஜி//

  பதிவுலதான் அந்த ஜி, இந்த ஜி -ன்னு சொன்னீங்க... கமெண்ட்ல கூடவா ஜி... :)

  பாத்து.. ஜி சம்பந்தப்பட்டவங்களை எல்லாம் தூக்குறான்களாம் # 2ஜி :))

  ReplyDelete
 12. வாங்க சிசு.. :)

  ReplyDelete
 13. யதார்த்தமான கேள்விகள்...

  அத்தனை கேள்வி கேக்குறோம்... அத்தனைக்கும் பதில் சொல்லுறாங்க... ஆனா அவுங்க கேக்குற ஒரு கேள்விக்கு நம்மளால பதில் சொல்ல முடியலியே....

  (இதற்கும் சிபி அண்ணன் ஏதாவது ஒரு 'ஜி' பெயர் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... :))

  ReplyDelete
 14. இதுக்கு கொஸ்டின் பேப்பர் அவுட் பண்ணுவாங்களா....??!!

  "பொறுப்பில்லா பையன், பிடிக்கல" - எனக்கு பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 15. அருமை அருமை
  சொல்லிப்போன விதமும் சொல்லிய விஷயமும்
  முடிவும் மிக அருமை
  நீந்தத் தெரியாத மீனவன் போல
  தெரிந்து கொள்ள வேண்டியதைத்
  தெரிந்து கொள்ளாதவன் எதற்கு?
  பொறுப்பில்லாதவன் என்பதைவிட
  லாயக்கற்றவன் எனக் கூடச் சொல்லலாமா?
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. ரொம்ப நிறைவா சொல்லப்பட்ட கருத்து.

  ReplyDelete
 17. படைத்த விதம் அதனினும் அருமை.

  ReplyDelete
 18. இனிதே முடிந்தது
  பெண் பார்க்கும் படலம்
  பையனிடம் அம்மா பதில் கேட்க
  "பிடிச்சிருக்கு.. பொறுப்பான பொண்ணு"
  பெண்ணிடம் அம்மா கேட்க..
  "பொறுப்பில்லா பையன், பிடிக்கல" //

  // ஆத்தாடி காலம் மாறி போச்சு போல ....
  எல்லாத்தையும் நோட் பண்ணிகொள்கிறேன்..
  ஒரு மார்க்கம்தான் இருக்கீங்க போல வாழ்த்துக்கள்
  லாலி:)

  ReplyDelete
 19. இதனால் சகலமான பேச்சிலர்சூக்கும் சொல்லப்படும் தகவல் என்னான்னா பொண்ணூ பார்க்க போங்க ஆனா பொண்ணூ கூட தனியா போய் பேசர வேலை மட்டும் வேணாம் // ok noted with thanksji

  ReplyDelete
 20. அன்பு நன்றிகள் லிங்கம் சார்!

  அன்பு நன்றிகள் ரமணி சார்!

  அன்பு நன்றிகள் சிவா!

  :)

  ReplyDelete
 21. பார்ரா! இது சூப்பரா இருக்கே! :-)
  வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 22. நல்ல வரி ஜாலங்கள் தெரிந்துள்ளீர்கள்!

  ReplyDelete
 23. nalla irukku naanum rasichen..congrats...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...