அவளுக்கென்று ஒரு கவிதை
அன்னையர் தினத்துக்காய் எழுதி
பெருமை பொங்க நீட்டியபோது
மென்மையாய் சிரித்தபடி சொல்கிறாள்
எந்த ஒரு கவிதையும்
அவ்வளவு அழகில்லை
முதல் முதலாய் நீ
'அம்மா' என்று அழைத்ததை விட..
எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட
கவிதை அவள்
"உனக்கு எதுவும் புரியாது.."
நான் முறைத்த வேளையிலும்
என்னை முழுதாய் புரிந்தவள்..
பெரும்பாலான என் தவறுகள்
தவிர்க்க படுகின்றன..
இன்னமும் என்னை குழந்தையாகவே
நினைத்துக்கொண்டிருக்கும் அவளால்..
நான் கைவிட்டாலும்
எனக்காய் கண்ணீர் விடுபவள்
உலகம் முழுதும் நான் சுற்றினாலும்
அவளின் உலகம் நான் மட்டுமே
அவள் புன்னகைக்க
ஓராயிரம் பரிசுகள் வேண்டாம்
நான் மட்டுமே போதும்..
கவிதைகள் அனைத்தும் அருமை . உங்களுக்கு எனது அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்
ReplyDelete>>அவள் புன்னகைக்க
ReplyDeleteஓராயிரம் பரிசுகள் வேண்டாம்
நான் மட்டுமே போதும்..
நச் லைன்ஸ்
நன்றி சங்கர்! :)
ReplyDeleteநன்றி சி.பி. சார்! :)
அழகான கவிதை! படங்களும் கவிதை!
ReplyDeleteபடங்களும் பதிவும் மிக அருமை
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டுப்பதைப்போல
அம்மா என்கிற ஒரு சொல்லுக்குள்
கவிதைகள் ஆயிரம் அடக்கம்
அருமையான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்
//எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட
ReplyDeleteகவிதை அவள்//
வார்த்தைகள் பிரயோகம் ரசிக்க வைக்கிறது...
கவிதை அம்மாவைப் போலவே....
படங்கள் கவிதையைப் போலவே...
அம்மா என்றாலே கவிதைதான் இல்லையா....
ReplyDeleteஉங்களுக்கு எனது "அன்னையர் தின" வாழ்த்துகள்...
ReplyDelete//எந்த ஒரு கவிதையும்
ReplyDeleteஅவ்வளவு அழகில்லை
முதல் முதலாய் நீ
'அம்மா' என்று அழைத்ததை விட..
எழுத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட
கவிதை அவள்///
ஓ சூப்பர்......
//இன்னமும் என்னை குழந்தையாகவே
ReplyDeleteநினைத்துக்கொண்டிருக்கும் அவளால்.. //
அம்மான்னா சும்மா இல்லே....
//அவள் புன்னகைக்க
ReplyDeleteஓராயிரம் பரிசுகள் வேண்டாம்
நான் மட்டுமே போதும்..///
ம்ம்ம்ம் அசத்திட்டீங்க போங்க.....
போட்டோக்களும் கவிதையா இருக்கு.....
ReplyDeleteநன்றி மனோ சார்!
ReplyDeleteநன்றி தென்றல்!
நன்றி ரமணி சார்!
நன்றி சிசு!
:)
"எந்த ஒரு கவிதையும்
ReplyDeleteஅவ்வளவு அழகில்லை
முதல் முதலாய் நீ
'அம்மா' என்று அழைத்ததை விட"....
மறுக்க, மறைக்க முடியாத உண்மைகள்... வார்த்தைகள் அனைத்தும் மிக அழகு நம் அன்னையின் மனது மாதிரி....
வாழ்த்துக்கள் தோழி.....
அருமைங்க
ReplyDelete