அவள் அழகு
அவள் அழுகையில்
அழகோ அழகு..
அவள்..
அழுவதையே விரும்புகிறேன்
சிரிப்பதை விட
அப்போது தானே
மூக்கை துடைப்பாள்
என் சட்டை பிடித்திழுத்து
அவள் அழுகையில்
சற்றே நனையும்
காதோர தலைமுடி
மயிலிறகு...
மழையில் நனைவதை போல
அழுகையிலும்
அழகாய் அழ
எப்படி முடிகிறது
அவளால் மட்டும்?!
அழுதுகொண்டே..
அதற்காய் வெட்கம் கொண்டு
சற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று
மெல்ல விசும்புகையில்
ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
அவளின் முன்னே
சிவந்திருக்கும் கண்களும்
படர்ந்திருக்கும் கண்ணீரும்
பனியின் நடுவே ரோஜாக்களாய்
திடீர் மழை போலவே
அவளது கண்ணீரும்
அழுது முடிந்த பின்னும்
இமைகளில் ஈரம்
இலைகளின் நீராய்
அவள் அழுகையில் மிக அழகாக இருக்கக் கூடும்
ReplyDeleteஆயினும் அழுகையை ரசித்தல் அன்புக்கு அழகா?
சிரிக்கையில் அழகில்லையாயினும்
சிரிக்கவிட்டு மகிழ்தல் அல்லவோ
உண்மை அன்பின் உன்னதப் பண்பு
அழுகையிலும்
ReplyDeleteஅழகாய் அழ
எப்படி முடிகிறது
அவளால் மட்டும்?!//
அசத்தல் அசத்தல்....!!!
me the firstu.....
ReplyDeleteஅதற்காய் வெட்கம் கொண்டு
ReplyDeleteசற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று
மெல்ல விசும்புகையில்
ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
அவளின் முன்னே
அட அட மச்சி நீ கலக்கிட்ட போ....
உனக்கு ஒரு mootai 5ஸ்டார் முட்டாய் போக்கே உனது கவிதைக்கு..so sweet
//
ReplyDeleteஅவள் அழகு
அவள் அழுகையில்
அழகோ அழகு..
///
அருமையான வரி
visit : www.kingraja.co.nr
ReplyDeleteகவிதை வரிகளும், அதற்கான பட தேர்வும் உங்கள் மெல்லிய உள்ளத்தை வெளீப்படுத்துகிறது
ReplyDeleteஅழுதுகொண்டே..
ReplyDeleteஅதற்காய் வெட்கம் கொண்டு
சற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று //
அழகு! அழகு!அருமை. கவிதைக்குப் பாராட்டுக்கள்.
அழுவதில் கூட கவிதையா?
ReplyDelete///
ReplyDeleteஅழுதுகொண்டே..
அதற்காய் வெட்கம் கொண்டு
சற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று
மெல்ல விசும்புகையில்
ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
அவளின் முன்னே ////
அசத்தல் வரிகள்...
ரசிக்கும் படியான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அருமையான, மென்மையான கவிதை...
ReplyDeleteசரிங்க ரமணி சார்! இனிமே சிரிக்க வைச்சிடுவோம்.. :)
ReplyDeleteநன்றி மனோ சார்! உங்க செடி எப்படி இருக்கு.. எவ்ளோ குடம் தண்ணி ஊத்தி எவ்ளோ பூ பூத்தது?
மிட்டாய்க்கும் பூவுக்கும் நன்றி சிவா! :)
தங்கள் வருகைக்கு நன்றி ராஜா.. :)
சி பி சார்! ரொம்ப ரொம்ப நன்றி என் மனச படிச்சி சொன்னதுக்கு.. :)
அடிக்கடி வர ராஜிக்கு என் அன்பு நன்றிகள்!
சௌந்தர் சார்! இப்போ தான் உங்க blog ல இருந்து வரேன் :)
அன்பு நன்றிகள் சிசு!
மிக இனிமையான அருமையான கவிதை
ReplyDeleteதங்கள் அன்பு கருத்துக்களுக்கு நன்றி லிங்கம் சார்! :)
ReplyDeleteஅன்பு நன்றிகள் மீனு! :)
சில குழந்தைகள் அழும் போது ரசித்ததுண்டு.குமரியின் அழுகையும் அழகுதான் போலும்!
ReplyDelete//திடீர் மழை போலவே
ReplyDeleteஅவளது கண்ணீரும்
அழுது முடிந்த பின்னும்
இமைகளில் ஈரம்
இலைகளின் நீராய்//
nice lines