நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

20 May 2011

நேற்றைய இரவில் நீ

**********************************************************************************

கதவை மூடியதும் 
முத்தமிட துவங்கின
உன் நினைவுகள்
மௌனமாய் நான் நிற்க 
சப்தமிடுகிறது கதவு 
---------------------------------------------------------------------------


விண்ணை தொட்டு வந்ததினால்
பெருமை கொண்டது மழை
உன்னை தொட்டு போனதினால் 
பொறாமை கொண்டது என் மனம்
-------------------------------------------------------------------------- 


கோலம் போடுகையில்
குனிந்து போடாதே
வெட்கத்தில் சிவக்கிறது பூமி
கோபத்தில் சிவக்கிறேன் நான்
---------------------------------------------------------------------------


தலைக்குளித்த பின்
கூந்தல் துவட்டி  
நீ உதிர்க்கும் நீர்த்துளிகள்
பார்த்து கொண்டிருந்த 
என் முகத்தில் பருக்களாய்
-------------------------------------------------------------------------- 


எதிர் வீட்டு குழந்தைக்கு
நீ கொடுத்த முத்தத்தை
வாங்க முடியவில்லை
எதை கொடுத்தும்
அதனிடம் இருந்து..
---------------------------------------------------------------------------


ஒரு புகைப்படம் கேட்டேன்
முடியாது என்றாள் 
முயற்சியை கைவிட்ட வேளையிலே 
முன் வந்து நிற்கிறாள் 
எடுத்துகொள் என்று 
குழந்தைகளை படமெடுப்பது
அத்தனை சுலபமில்லை..
---------------------------------------------------------------------------

15 comments:

  1. தலைக்குளித்த பின்
    கூந்தல் துவட்டி
    நீ உதிர்க்கும் நீர்த்துளிகள்
    பார்த்து கொண்டிருந்த
    என் முகத்தில் பருக்களாய்>>>>>>

    செம வரிகள்.

    ReplyDelete
  2. எதிர் வீட்டு குழந்தைக்கு
    நீ கொடுத்த முத்தத்தை
    வாங்க முடியவில்லை
    எதை கொடுத்தும்
    அதனிடம் இருந்து..

    அருமை..

    ReplyDelete
  3. குழந்தைகள் உலகத்தில்
    குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு..

    ReplyDelete
  4. அன்பு நன்றிகள் பிரகாஷ்! :)

    தங்கள் வருகைக்கு நன்றி குணா சார்! :)

    ReplyDelete
  5. all ur poems are like writter Sujatha's style.
    I wont say keep it up...bcz u r allready on peak my 4nd :)proud of u

    ReplyDelete
  6. Thank you Gopi! I am not on peak.. jus beside with all my friends like a baby plant :)

    ReplyDelete
  7. நன்றி மனோ சார்!

    ReplyDelete
  8. அட அட குழந்தைங்க போட்டோ எல்லாம் அருமை அப்படீய என்ன போல இருக்கு
    கவிதை கவிதை ஒரு வரிகளும்....


    Lali அப்படியே ஒரு டீ சொல்லேன்...:)

    ReplyDelete
  9. எதிர் வீட்டு குழந்தைக்கு
    நீ கொடுத்த முத்தத்தை
    வாங்க முடியவில்லை
    எதை கொடுத்தும்
    அதனிடம் இருந்து//

    பின்ன நாங்கலாம் ரொம்ப சமத்து..
    ஒன்லி இன்கம்மிங் நாட் அவுட் கோயங்

    ReplyDelete
  10. தலைக்குளித்த பின்
    கூந்தல் துவட்டி
    நீ உதிர்க்கும் நீர்த்துளிகள்
    பார்த்து கொண்டிருந்த
    என் முகத்தில் பருக்களாய்
    //

    ethu veil kaalam appadithan paru varum..adikadi vileiy pogatheenga...

    ReplyDelete
  11. விண்ணை தொட்டு வந்ததினால்
    பெருமை கொண்டது மழை
    உன்னை தொட்டு போனதினால்
    பொறாமை கொண்டது என் மனம்
    கவிதை வரிகள் அருமை வாழ்த்துகள்....

    ReplyDelete
  12. இனிய வருகை அம்பாலடியாள்! :)


    வாங்க நண்பர் சிவா! :)

    ReplyDelete
  13. @ FOOD said...

    தொடர் வருகைக்கு நன்றி சார்! :)

    ReplyDelete
  14. அழகானக் கவிதைகள்; அதற்கேற்ற குழந்தைகள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...