நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

05 April 2011

யாருக்கான வேண்டுதல் இது?




அவளையே பின்தொடர்வதாய்
குற்றம் சாட்டுகிறாள்
வார்த்தைகளால் சாகடிக்கிறாள்
கோவில் மணிக்கு போட்டியாய்
கணீரென்று கத்துகிறாள்  
மறுதலிக்கவோ..
என்னை நிரூபிக்கவோ
ஒரு நொடி கூட தராமல்..
 
'ஒரு நிமிஷம்'
என் வார்த்தைகள் எல்லாம்
ஒலிக்காமலே அடங்க..
ஆண்மையின் ஆதிக்கத்தில்
இரவை நனைக்கும் நிலவின் சாட்சியாய்  
வளைகள் ஒலிக்கும் கையைப்பிடித்து
'உன்னை நேசிக்கிறேன்'
அப்பாடா! உரைத்து விட்டேன்
 
நிசப்தமாகின நிமிடங்கள்..
கண்களில் கண்ணீருடன்
உதடுகளை கடித்தபடி..
உடைந்த வளையல்களை வெறித்துவிட்டு 
ஒரு வார்த்தையும் பேசாமல்
வெளியேறிவிட்டாள் கோவிலைவிட்டு
இனி என்ன இருக்கிறது?
ஆறாத்துயருடன்..
என் அடுத்தநாளும் விடிய
 
கோபுரங்கள் என்னை குத்திக்கிழிக்க
சிலைகள் கேலி செய்ய
மணியோ மௌனமாய் நிற்க  
கண்டும் காணாமல் 
கடவுள் முன் நின்றபடி  
ரகசியமாய் முணுமுணுக்கிறாள்
'எப்போது வளையல் வாங்கிதர போகிறாய்?!'
யாருக்கான வேண்டுதல் இது?
 
நான் வேண்டுமென்றா?
இல்லை.. வளையல்கள் வேண்டுமென்றா?!

3 comments:

  1. முதல் மழை எனை நனைத்ததே.....

    ReplyDelete
  2. >>நான் வேண்டுமென்றா?
    இல்லை.. வளையல்கள் வேண்டுமென்றா?!

    செமயான வரிகள்

    ReplyDelete
  3. இப்படி யாருக்காவது வளையல் வாங்கி தந்த அனுபவம் உண்டா செந்தில்?! :)
    அட! மறைக்காம சொல்லுங்க..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...