வர சொன்னாய்
வந்தேன்..
காத்திருக்க சொன்னாய்
காத்திருக்கிறேன்
மௌனித்திருக்கிறாய்
மறுமொழிக்காய் முகம் பார்க்கிறேன்
பின்னால் சுற்றாதே என்கிறாய்
எப்படியடி?!..
கண்ணியமற்று சேலை இழுக்கும்
காற்றை கூட நேசிக்கிறாய்
காலை வாரும்
அலையை பார்த்து சிரிக்கிறாய்
சுண்டல் விற்பவனிடம்
சிநேகமாய் பேசுகிறாய்
தூரத்து குழந்தைகளை
ரசித்து பார்க்கிறாய்
காற்று நிரம்பிய பலூன்களை
கையில் பிடித்திருக்கிறாய்
கடற்கரை இலக்கணங்கள்
எல்லாம் எல்லாம் கவனித்திருக்கிறாய்
இரண்டடி தள்ளி அமர்ந்திருக்கும்
என்னை மட்டும் மறந்தபடி
எழுந்து போய்விடடி உடனே
என்னையே ரசிக்கமுடியவில்லை என்னால்..
உப்பரித்து போகட்டும் என் காதலை!
கவிதை சூப்பர்...எளிமையான வரிகள்
ReplyDelete//உப்பரித்து போகட்டும் என் காதலை! //
ReplyDeleteஇந்த வரியே ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது
நன்றி பிரகாஷ்!
ReplyDeleteநன்றி நாகசுப்ரமணியன்!