நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

28 April 2011

அடடா மழைடா!..


உன் குடையில் இடம் கொடேன் 
ஒரு ஓரமாகவாவது
நனைந்து விட்டு போகிறேன்...


முகம் மறைக்காதே குடை கொண்டு
நனைந்த நீ தெரிகிறாய்..


இடி இடிக்கையில் 
என்னை நினைத்துக்கொள்..
இன்னமும் பயமாக இருந்தால்..
என்னை அணைப்பதாய் நினைத்துக்கொள்!


மழையில் கலைந்த கோலத்தை 
வருத்தமாய் பார்க்கிறாய்
வார்த்தைகளில்லாமல் பார்க்கிறேன்
கண்ணில் மைகரைந்து நிற்கும் 
உன் அழகிய கோலத்தை..


ஏதாவது ஒரு மழைநாளில் 
என் வீடு வந்து போ
தேநீர் கோப்பையும் நானும்..
உன் அணைப்புக்காய் ஏங்கியபடி .. அம்மா திட்டுவாள் என்று 
அவசரமாய் ஓடாதே..
கண்ணீர் சிந்துவோம் 
இன்னும் அதிகமாய்
மழையும் நானும்.. 6 comments:

 1. மழையில் நானும் நனைந்தேன்..
  மண் வாசம் வீசுகிறது...

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. நன்றி கருன்! :)

  நன்றி சௌந்தர்! :)

  ReplyDelete
 3. //
  அம்மா திட்டுவாள் என்று
  அவசரமாய் ஓடாதே..
  கண்ணீர் சிந்துவோம்
  இன்னும் அதிகமாய்
  மழையும் நானும்.. //
  chanceless

  ReplyDelete
 4. பட்ங்களும் அதற்கான பதிவுகளும் மிக அருமை
  மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்கத் தூண்டும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நன்றி ரமணி! :)

  நன்றி நாகசுப்ரமணியன்! :)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...