நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

01 April 2011

தொப்பை :)

திமிர் பிடித்தவன்
திடீரென அழவைப்பான்

பலமணி நேரம் பேசுவான் 
அதே நேரம்
பேசாமலிருந்து பைத்தியமாக்குவான்

சில வரிகளில் திட்டிவிட்டு
பலவரிகளில் 'சரி சரி' என்று
சமாதானம் செய்வான் 

மெளனமாக இருந்துகொண்டே
மூக்கு நுனியில் கோவம் காட்டுவான்
ஆயிரம் கேள்விகளிருந்தாலும் 
'ஒன்றுமில்லை' என்றுரைப்பான் 

'பேசாமடந்தை' போல் இருந்தபடி 
பெரியதாய் ஆராய்ச்சி செய்வான்
கண்டுபிடித்ததை எல்லாம்
ஒருபோதும் சொல்லவே மாட்டான் 

சிரிக்கவே காசுகேட்பான் 
உம்மணாமூஞ்சி..
சின்னதாய் சிரித்துவிட்டால் 
உடனே காதல் கேட்பான்  

காதலிப்பதாய் சொல்லி சொல்லி 
கண்கள் விரிய செய்வான் 
முத்தம் கொடுத்தே 
கைபேசியை கதறவைப்பான்

எப்படியுமே புரியவில்லை 
அவனை..
கண்ணாமூச்சி ஆடுகிறான் 
காதல் என்ற பெயரில் 

கோவம் கொண்ட ஒருவேளையில் 
கத்தியே விட்டேன் 
'போடா தொப்பை' என்று

கேள்விப்பட்டேன் 
ஓடிக்கொண்டு இருக்கிறானாம் 
அதிகாலைகளில் 
அறுபது மைல் வேகத்தில்

அப்பாடா!
இனி சந்திக்கமாட்டான் 
தொப்பை குறையும் வரை 
என்னை..6 comments:

 1. மிக அருமை...யாருக்கு இப்படி தொப்பைய குறைக்க வழி சொன்னிங்க...

  ReplyDelete
 2. தொப்பை இருக்குற அனைத்து நண்பர்களுக்கும் இது பொருந்தும் :)

  ReplyDelete
 3. தங்கள் வருகைக்கு நன்றி செந்தில்..
  தொப்பை இருக்குற எல்லாருமே பாவம்தான் :)
  அதுனால தான் தொப்பைய குறைக்க இப்படி ஒரு அருமையான யோசனை சொல்லி இருக்கோம்!

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கு நன்றி ராம்குமார் :)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...