நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

07 April 2011

கடமைக்கு பயந்தவன் நான் இல்லை..!!!



சண்டைப்போட்டு கொண்டிருக்கிறேன்
அமைதியாய் இருக்கிறாள் அவள்
பயமாய் இருக்கிறது எனக்கு
ம்ம்..

மீண்டும்..
குரலை உயர்த்துகிறேன்
முகம் திருப்பி நிற்கிறாள்
அவள்முன் போய் நிற்கிறேன்


அதுதானே பார்த்தேன்..
மூக்கை உறிஞ்சிக்கொண்டு
கண்களை கசக்கியபடி..
அடடா! ஆரம்பித்துவிட்டாளா?!

அடுத்தது என்ன?
'இருந்தாலும் நீ..'
அப்படியே நிற்கிறது என்வார்த்தைகள்..
அதுதான் முறைக்கிறாளே..

அழுகையுடன் முறைப்பவளை
அணைத்து தேற்றுவது
என் கடமை இல்லையா?!
மீண்டும் வார்த்தை தேற்றுதல்கள்

சரிவராது போல இருக்கிறதே..
பெருமூச்சுடன் யோசிக்கறேன்..
என்ன செய்வது?
ஆஹா! வந்துடுச்சு..

'வெளியில போய்ட்டு வரலாமா?'
மாட்டேன் என்ற தலையாட்டல்
அய்யோ!
'அன்னிக்கு நீ கேட்ட இல்ல..'

லேசாய் புருவம் உயர்த்துகிறாள்
'அதுதான், அந்த துணிகடைம்மா..'
அப்பாடா! மெல்லிய சிரிப்பு அவளிடம்
இதோ கிளம்பியாயிற்று..

ச்ச..! என்ன வாழ்க்கையடா இது!
சண்டையும் நானே போட்டு
சமாதானமும் நானே செய்து..
ஊர்சுற்ற வேறு அழைத்து போய்..

இதெல்லாம் இருக்கட்டும்..
இரவு கால்பிடிக்க வேறு சொல்வாளே..
பரவாயில்லை!
கடமைக்கு பயந்தவன் நான் இல்லை..!!!  

4 comments:

  1. தங்கள் வருகைக்கு நன்றி நட்பு :)

    ReplyDelete
  2. நல்ல கவிதை லலி... கடைசி பத்தி அற்புதம் "
    இதெல்லாம் இருக்கட்டும்..
    இரவு கால்பிடிக்க வேறு சொல்வாளே..
    பரவாயில்லை!
    கடமைக்கு பயந்தவன் நான் இல்லை..!!! "
    நல்ல சிந்தனை... :)

    ReplyDelete
  3. எல்லாம் நம்ம நண்பர்களோட வாழ்க்கை வரலாறு தான்!!! :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...