நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

27 April 2011

இங்கே மழை, அங்கே நீ..




அபூர்வமாக தான்
கோடையில் மழை..
எனக்கான உன் வருகையாய்

நீ தரும் சிறு முத்தம் போல
ஒரு துளி..
அவசரமாய் உதடு நனைத்து போகிறது.. 


ஊடுருவும் குளிரில்
கதகதப்பாய் உன் நினைவுகள்
என் நெஞ்சை அணைத்தபடி..  

ஆலங்கட்டி மழை
என் தலையில் கொட்டுதடி
அழகே!
நீ ஆத்திரத்தில் கொட்டுவதை போலவே..

தென்னை மரமும், நானும்
ஆடிக்கொண்டே இருக்கிறோம் 
அழுத்தமான உன் அணைப்பினிலே 

தும்மலும் இருமலும்
உன் நினைவால் மட்டும் தானடி..
மழையால் இல்லவே இல்லை.. 

வானவில் வந்து போகுதடி..
இன்றைக்கு வந்தது..
உன் துப்பட்டாவா? சேலையா?

உளுந்தரைத்த கையுடன்
நீ வந்து நிற்பதை போலவே
மேககூட்டம் நிற்குதடி வானத்திலே 

நீ சேரும் வேளையிலே
இயற்கை தொலைத்தது கொஞ்சம்தான் 
இதயம் தொலைத்தது நான் மட்டுமே 


உன் வருகையினால் சிலிர்த்தபடி
காற்றெல்லாம் காதலிலே  
பூக்களும் நானும் பூமியிலே

இடியும் மின்னலும்
உன்னை விடவா 
என்னை மிரட்டிவிட முடியும்?   

குடை பறக்க நிற்கிறேன்
உன்னை முழுதாய் உணர்ந்திடவே.. 

5 comments:

  1. muluthai nanainthe vitten intha kavitihaiyil....really superb...

    ReplyDelete
  2. தனித்த காட்டில் இசைக்கும் குயிலின் கீதம் போல் இதாமாக இருக்கிறது தங்கள் கவிதை....

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி கோபி.. :)

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சௌந்தர் :)

    ReplyDelete
  5. கவிதை அருமை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...