அவள் அழகு
அவள் அழுகையில்
அழகோ அழகு..
அவள்..
அழுவதையே விரும்புகிறேன்
சிரிப்பதை விட
அப்போது தானே
மூக்கை துடைப்பாள்
என் சட்டை பிடித்திழுத்து
அவள் அழுகையில்
சற்றே நனையும்
காதோர தலைமுடி
மயிலிறகு...
மழையில் நனைவதை போல
அழுகையிலும்
அழகாய் அழ
எப்படி முடிகிறது
அவளால் மட்டும்?!
அழுதுகொண்டே..
அதற்காய் வெட்கம் கொண்டு
சற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று
மெல்ல விசும்புகையில்
ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
அவளின் முன்னே
சிவந்திருக்கும் கண்களும்
படர்ந்திருக்கும் கண்ணீரும்
பனியின் நடுவே ரோஜாக்களாய்
திடீர் மழை போலவே
அவளது கண்ணீரும்
அழுது முடிந்த பின்னும்
இமைகளில் ஈரம்
இலைகளின் நீராய்