நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

17 August 2012

மழை வரும் போதெல்லாம்


மழை வரும் போதெல்லாம்
நீயும் வருகிறாய்
துளிகளாக இல்லாமல்
நெஞ்சில் வலிகளாக

கையில் பிடித்தபின்னும்
நிற்காத துளிகளாய்
நாம் கைபிடித்த பின்னும்
நீண்ட தூரத்தில்

ஏதோ பேச நினைத்து
நான் அழைத்த அழைப்பெல்லாம்
உன் குரல் கேட்ட நொடியினிலே
உடைந்து சிதறுகின்றன
கண்களில் நீர் துளிகளாய்
காதலுக்கு மறுபெயர் கண்ணீரா?

துவைக்க விருப்பமில்லாத
வேர்வை வாசம் நிறைந்த
உன் சட்டை 
உனக்கான இடத்தை 
என்னுள் நிரப்பியபடி

நனைந்த இலைகள் கூட
ஒன்றை ஒன்று முத்தமிட்டபடி
நான் நிற்கிறேன்
மரமெனவே..

ஜன்னல் கம்பியிலே
இரு பறவைகள்..
ஒன்றாய் அணைப்பினிலே
நானும் 
நீ பரிசளித்த பொம்மையும்
அவற்றை போலவே...

மிக மெல்லிய 
காதல் பாடல்
எங்கோ ஒலிக்கிறது
நம்முடைய 
பிரிவின் குரலாய்..

எனக்கிருக்கும் வலி
உனக்குள்ளும் இருக்கும்தானே?
உன்னை அழைக்க முயல்கிறேன்
மீண்டும் மழை..

12 comments:

 1. மழை வரும் போதெல்லாம்
  நீயும் வருகிறாய்
  துளிகளாக இல்லாமல்
  நெஞ்சில் வலிகளாக//

  பிரிவின் வலியினை
  இதனைவிட வலிமையாகச் சொல்லுதல் கடினமே
  மனமசைத்துப்போகும் அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் ரமணி சார்! :)

   Delete
 2. காதலுக்கு மறுபெயர் கண்ணீரா?

  அருமையான வரிகள்... அனுபவமும் கலந்த உணர்வோட்டம் அங்காங்கே தெரிகிறது.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. அழகான வரிகள் , தொடரட்டும்

  ReplyDelete
 4. நல்ல வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete
 5. வட்டம் முடிந்துவிட்டது!
  நன்று

  ReplyDelete
 6. அழகான கவிதை! அருமை!

  இன்று என் தளத்தில்
  திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
  குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
  ReplyDelete
 7. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
 8. கவிதை நல்லாயிருக்கு, பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. மிக மெல்லிய
  காதல் பாடல்
  எங்கோ ஒலிக்கிறது
  நம்முடைய
  பிரிவின் குரலாய்.. Classic...Super Line...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...