நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

29 August 2012

பேசாதே!இறக்கும்வரை வாழ்ந்துக்கொண்டு இருப்பேன்
வாழும்வரை இறந்துக்கொண்டும் இருப்பேன்
உன் மீதான காதலால்

எச்சில் என 
என் முத்தங்களை
துடைக்கும் முன்
சற்றே ருசித்துப்பார்..
உப்பின் சுவையும் கலந்திருக்கும் 
உன்னாலே உருவான
என் கண்ணீர் துளிகளினால்..

நாம்
பிரிந்திருக்க
தேவைப்படவில்லை
ஒரு காரணமும்
ஆனால்..
சேர்ந்திருக்க
தேவைப்படுகின்றன
சில காரணங்களாவது

உன்னுடன் பேசாமல்
ஒரு நிமிடமாவது
இருக்க முடியுமா?
மௌனமாய் கேட்கிறது
என் அலைபேசி..

மயிலிறகு அதிகமானால்
வரும் பாரத்தை விட
காதல் அதிகமானால் 
வரும் பாரம் அதிகம்தான்!!!

9 comments:

 1. இறக்கும்வரை வாழ்ந்துக்கொண்டு இருப்பேன்
  வாழும்வரை இறந்துக்கொண்டும் இருப்பேன்
  உன் மீதான காதலால்
  அருமை !..தொடர வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
  Replies
  1. Thank you sister! :)
   Have a nice day!

   Delete
 2. கவிதை மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. முதல் இரு வரிகள் அருமை...

  முடிவில் நான்கு வரிகள் உண்மை...

  நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மயிலிறகு அதிகமானால்
  வரும் பாரத்தை விட
  காதல் அதிகமானால்
  வரும் பாரம் அதிகம்தான்!!!//

  காதல் வயப்பட்டால்தான்
  இவ்வளவு அழகாக யோசிக்க முடியுமானால்
  எந்த வயதிலும் காதலிக்கலாம் போல உள்ளதே
  மனம் தொட்ட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வணக்கம்

  காற்றைக் கொண்டு கவிபாடிக்
  களிக்கும் இலையே! கனித்தமிழின்
  ஊற்றைக் கொண்டு வந்துன்றன்
  உயா்ந்த வலையில் வைத்துள்ளாய்!
  கீற்றைப் பிடித்தே ஆடுகிற
  கிள்ளை மொழியே உன்படைப்பு!
  நேற்றை இன்றை நாளையினை
  நெஞ்சத் தமிழில் வென்றிடுக!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
 6. //மயிலிறகு அதிகமானால்
  வரும் பாரத்தை விட
  காதல் அதிகமானால்
  வரும் பாரம் அதிகம்தான்//

  மிகவும் அருமையான வரிகள்...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 7. மிக அழகான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 8. எச்சில் என
  என் முத்தங்களை
  துடைக்கும் முன்
  சற்றே ருசித்துப்பார்..
  உப்பின் சுவையும் கலந்திருக்கும்
  உன்னாலே உருவான
  என் கண்ணீர் துளிகளினால்..

  Super line .... congrats..:)
  One Line Tamil Kavithaigal(http://apdineshkumar.blogspot.in/)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...