**********************************************************************************
கதவை மூடியதும்
முத்தமிட துவங்கின
உன் நினைவுகள்
மௌனமாய் நான் நிற்க
சப்தமிடுகிறது கதவு
---------------------------------------------------------------------------
விண்ணை தொட்டு வந்ததினால்
பெருமை கொண்டது மழை
உன்னை தொட்டு போனதினால்
பொறாமை கொண்டது என் மனம்
--------------------------------------------------------------------------
கோலம் போடுகையில்
குனிந்து போடாதே
வெட்கத்தில் சிவக்கிறது பூமி
கோபத்தில் சிவக்கிறேன் நான்
---------------------------------------------------------------------------
தலைக்குளித்த பின்
கூந்தல் துவட்டி
நீ உதிர்க்கும் நீர்த்துளிகள்
பார்த்து கொண்டிருந்த
என் முகத்தில் பருக்களாய்
--------------------------------------------------------------------------
எதிர் வீட்டு குழந்தைக்கு
நீ கொடுத்த முத்தத்தை
வாங்க முடியவில்லை
எதை கொடுத்தும்
அதனிடம் இருந்து..
---------------------------------------------------------------------------
ஒரு புகைப்படம் கேட்டேன்
முடியாது என்றாள்
முயற்சியை கைவிட்ட வேளையிலே
முன் வந்து நிற்கிறாள்
எடுத்துகொள் என்று
குழந்தைகளை படமெடுப்பது
அத்தனை சுலபமில்லை..
---------------------------------------------------------------------------