சண்டைகளின் பொழுது
வார்த்தைகளை தேடுகிறாய்
சாமாதானங்களின் பொழுது
ரோஜாவை தேடுகிறாய்
எப்பொழுது தான்
என் மனதை தேடுவாய்?
காதலிக்கும் பொழுது
கணக்கில்லாமல் கொடுத்தாய்
சண்டைகள் போடாமலிருக்க
கல்யாணத்திற்கு பின்னரோ
கடமைக்கு கொடுக்கிறாய்
சண்டைகள் முடிந்த பிறகு
சிறு குழந்தையெனவே அழுகிறேன்
நம் சண்டைகளின் நடுவில்
நடிப்பென சொல்கிறாய்
நான் நடிகை இல்லை
உன் காதலி
நம் ஒவ்வொரு சண்டைகளையும்
உடனே மறந்து விடுகிறாய்
நாம் காதலித்த கணங்களை
மறந்ததை போலவே
எப்போதும் என்னுடன் இருக்கிறது
நீ கொடுத்த கரடிபொம்மை ஒன்று
அதனுடனும் நான் சண்டைபோடுகிறேன்
சண்டைகள் முடிந்த பின்
அதுமட்டும் மன்னிப்பு கேட்காது
உன் பெயர்தான் அதற்கும்