நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

22 July 2011

வேலைக்கு நேரமாச்சு


எனை கொல்லும் பல நேரங்கள்
நான் வெல்லும் சில நேரங்கள்
திறமை காட்டி எடுக்கப்படும்
பிச்சையென மாத சம்பளம்

ஏறுவதிலுள்ள சிரமம்
இறங்குவதில் இல்லை
வனம் தொலைத்த தேவதையாய்
எனை நானே தொலைக்கிறேன்

உறக்கத்திற்கு ஏங்கும் விழிகள் 
ஆடைகளுடன் ஐக்கியமாகிவிட்ட கைகள்
மரத்துப்போன சதையாய் இதயம்
மூடியே இருக்கும் மூளையின் மடிப்புகள்

பயணங்களில் புத்தகங்கள்
ஆனால், மனிதர்களை மட்டுமே படித்தபடி 
எதிர்ப்படும் மனித முகங்கள்
நானே தானா?
 
வெப்பத்துடனும் மழையுடனும்
நீளும் என் தீண்டுதல்கள்
உடையும் நீர்குமிழிகளாய்  
என் கண்களிலே
 
நிறுத்த முடியாத 
நீண்ட ஒரு பயணமாய் கற்பனைகள்
பெண்மைக்கான நாட்களிலும்
எதை மாற்றவும் நேரமின்றி

ஓடவும் நிற்கவும் 
அதுவே இயலாத கடிகாரமென 
வாழ்க்கை அமைந்த பின்
 
ஒரே கையென 
யானை சுமக்கும் தும்பிக்கையாய்
நானும் சுமக்கிறேன் நம்பிக்கையை   

24 comments:

 1. என்னங்க ரொம்ப நாளா ஆளை காணும்...

  ReplyDelete
 2. //////
  உறக்கத்திற்கு ஏங்கும் விழிகள்
  ஆடைகளுடன் ஐக்கியமாகிவிட்ட கைகள்
  மரத்துப்போன சதையாய் இதயம்
  மூடியே இருக்கும் மூளையின் மடிப்புகள்///

  வார்த்தைகளின் உச்சம்....

  ReplyDelete
 3. /////
  நிறுத்த முடியாத
  நீண்ட ஒரு பயணமாய் கற்பனைகள்/////

  என்று கற்ப்பனையை முடித்துக் கொள்கிறோம் அப்போது நாமும் இல்லையென்று அர்த்தம்...

  ReplyDelete
 4. ///////
  ஒரே கையென
  யானை சுமக்கும் தும்பிக்கையாய்
  நானும் சுமக்கிறேன் நம்பிக்கையை /////

  இந்த நம்பிக்கையில் உழன்றுக் கொண்டு இருக்கிறது உலகம்...


  அற்புதமான கவிதை...
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. அன்பு நன்றிகள் சௌந்தர்! :)
  கொஞ்சம் வேலை இருந்தது அதுனால காணாம போய்ட்டேன் :)

  ReplyDelete
 6. ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க..
  என்னை ஞாபகம் வைத்துக்கொண்டதற்கு நன்றிகள்..

  ReplyDelete
 7. தும்பிக்கையாய்
  நானும் சுமக்கிறேன் நம்பிக்கையை // அருமையான வரிகள்.... பாராட்டுகள்..

  ReplyDelete
 8. பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி
  எடுக்கப்படும் பிச்சையைத்தான்
  இதுவரை கேள்விப் பட்டிருக்கிறேன்
  நீங்கள் புதிதாக வித்தியாசமாக
  திறமை காட்டி எடுக்கும் பிச்சையை
  மாதச் சம்பளம் என மிகச் சரியாக
  சொல்லிப் போகிறீர்கள்
  படமும் பதிவும் மிகப் பொருத்தம்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. படத் தேர்வு அருமை...கவிதையும்....

  ReplyDelete
 10. நானும் சுமக்கிறேன் நம்பிக்கையை// அருமை

  ReplyDelete
 11. >>நான் வெல்லும் சில நேரங்கள்
  திறமை காட்டி எடுக்கப்படும்
  பிச்சையென மாத சம்பளம்

  adeengkappaa அடேங்கப்பா. என்னா ஒரு கோபம்?

  ReplyDelete
 12. நீங்கள் எடுத்துக்கொண்ட காலம், கோபம் மிகக் காட்டிட வைத்துள்ளது.

  ReplyDelete
 13. மாதச்சம்பளம் மேட்டர் - நெத்தியடி...

  ReplyDelete
 14. //பயணங்களில் புத்தகங்கள்
  ஆனால், மனிதர்களை மட்டுமே படித்தபடி
  எதிர்ப்படும் மனித முகங்கள்
  நானே தானா?//

  சத்தியமான தேடல். எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதனுள்ளும் தன்னைத் தேடும் மனம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒருவிதத்தில் அத்தனை பேரும் ஏதாவது ஒரு கோணத்தில் நம்மை எதிரொளிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

  ReplyDelete
 15. //பெண்மைக்கான நாட்களிலும்
  எதை மாற்றவும் நேரமின்றி//

  குறுக்கப்பட்ட கால அவகாசங்களை இதைவிட வேறெப்படி சங்கடத்துடன் சொல்ல...??!!

  ReplyDelete
 16. அத்தனை வரிகளும் என்னை(யும்) பிரதிபலிப்பதாகவே உணர்கிறேன்.

  ReplyDelete
 17. தங்கள் வருகைக்கும், அழகிய கருத்துக்களுக்கும் அன்பு நன்றிகள் கருன், ரமணி சார், ராஜா, மீனு, ராஜராஜேஸ்வரி, மாயஉலகம், சிவா, சி பி சார், லிங்கம் சார், சிசு :)

  ReplyDelete
 18. யானைக்குட்டி அழகாய் இருந்தாலும்
  இந்த கவிதை படித்த பின் யானை வளர்க்கும் கோவில்கள் மேல் கோபம் தான் வருகிறது....
  உங்கள் கவிதையும் யானைக்குட்டியும் மிக அழகு...

  ReplyDelete
 19. <<<ஓடவும் நிற்கவும்
  அதுவே இயலாத கடிகாரமென
  வாழ்க்கை அமைந்த பின்

  செம

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...