சிட்டு குருவி ஒன்று
தினமும் நீ குளிக்கையில்
எட்டிஎட்டி பார்த்து போகிறது
ரசித்து சிரிக்கிறாய் அதற்காக
எதிர்வரும் பெண்களை
நான் ஏறிட்டு பார்த்தாலே
ஏன் இப்படி கோபப்படுகிறாய்?
வேறு வேறு நியாயங்களா
உனக்கும் எனக்கும்..!
மீசைக்குள் ஒளித்து வைக்கிறேன்
என் கோபங்களையெல்லாம்
எல்லாம் வெளிப்படுகின்றன
முத்தங்களாய் உன் முன்னே
கூட்டத்திலும் பேசாதவன்
தனிமையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்
பெண்ணே! உன் மீது கொண்ட காதலால்..
பள்ளியிலும் கல்லூரியிலும்
படிக்காமல் சுற்றிதிரிந்தவனை
இரக்கமின்றி படிக்கவைக்கிறாய்
இரவு பகலாய்
அப்போது போலவே
இப்போதும் தோற்கிறேன்
உன் இதயத்தை படிக்கமுயன்று..
உனக்கெனவே வாங்குகிறேன்
கரடி பொம்மைகளை
ஆனால்.. பொறாமையோடு
உங்க பொறாமை ஞாயமானது தான்.
ReplyDeleteSuperSuper
ReplyDeleteவேறு வேறு நியாயங்களா
ReplyDeleteஉனக்கும் எனக்கும்..!
அருமை
நல்லாயிருக்கு காதலின் வெளிப்பாடு!
ReplyDeleteசாமி மீ தி பிர்ச்டு
ReplyDeleteகல்யாணம் பணபோற அந்த பொன்னையும்
கட்டிக்க போற பயனையும் அந்த ஆண்டவன்தான் காப்பத்தனும்
கவிதை கலக்கல்
மிக அருமை..எனக்கு மிகவும் பிடித்த வரி "
ReplyDeleteகூட்டத்திலும் பேசாதவன்
தனிமையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்
பெண்ணே! உன் மீது கொண்ட காதலால்.." பல பேருக்கு இந்தமாதிரி அனுபவம் இருக்கும்...என்னையும் சேத்தி....