இரவெல்லாம் விடாமல் மழை
இடைவிடாமல் உன் நினைவுகளும்
விடிந்தபின்னும் சாலையெங்கும் ஈரம்
அனிச்சையாய் கன்னத்தை துடைக்கிறேன்
******************************************************
மழைநாளின் இரவில்
மின்சாரம் தடைபட்டாலும்
கண்கள் பறிக்கும்
மின்னல் வெளிச்சமாய்
உயிரை பறிக்குது
அன்பே! உன் நினைவுகள்
அருகில் நீ இல்லாதபொழுதும்
******************************************************
பள்ளமென்றும் பாராமல்
வெள்ளமென பாயும் நீராய்
என் குறைகள் மறைக்கும்
உன் அன்பு காதல்
******************************************************
நீலமான வானத்தை நோக்கினால்
அது நீ தானடி!
அதில்
தினம் ஒரு வடிவெடுக்கும்
மேகம் நானே தான்
வானத்தை போலவே..
நீயும் மௌனமாய் நோக்கியபடி
என் மாற்றங்களையும்
உன் ஏமாற்றங்களையும்
******************************************************
அன்பே!
மழை நீர் சுமக்கா
மேகம் இருக்கக்கூடும்
காதல் நினைவுகள் சுமக்காத இதயம்
ஏதும் இருக்கக்கூடுமா என்ன?!
*****************************************************
எதிர்ப்படுகையில்
உதட்டில் விழும்
ஓர் மழை துளி
எதிர்பாராமல் நீ தரும்
சிறு முத்தமென
*****************************************************
நனையாதே என்று
குடைக்குள் உன்னை இழுக்கையிலே
நனைகிறேன் நான்
உன்னாலே உன்னாலே..
*****************************************************
meeeeeeeee the firstu..
ReplyDeleteபள்ளமென்றும் பாராமல்
ReplyDeleteவெள்ளமென பாயும் நீராய்
என் குறைகள் மறைக்கும்
உன் அன்பு காதல்
- Classic
அட சிவா..! :)
ReplyDeleteஅன்பு நன்றிகள் வெங்கடேஷ்! :)
ReplyDeleteஓ! கவிதை மழை!! அருமை! :-)
ReplyDeleteகுறிப்பாக,
>>>இரவெல்லாம் விடாமல்<<<
அசத்தல்!!
நினைவுகள் அருமை....!!!
ReplyDeleteஅசத்துங்க அசத்துங்க...
நன்றி உமாஜீ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! :)
ReplyDeleteஎதிர்ப்படுகையில்
ReplyDeleteஉதட்டில் விழும்
ஓர் மழை துளி
எதிர்பாராமல் நீ தரும்
சிறு முத்தமென
சூப்பர்....வெயில் காலத்தில் மழை(அதுவும் காதல் மழை ) அசத்தல் தோழி
வாங்க மனோ சார்! :)
ReplyDeleteரேவா! அங்கயும் மழை பெய்யுதா? :)
இரவெல்லாம் விடாமல் மழை
ReplyDeleteஇடைவிடாமல் உன் நினைவுகளும்
விடிந்தபின்னும் சாலையெங்கும் ஈரம்
அனிச்சையாய் கன்னத்தை துடைக்கிறேன்//
அழுகை!!
அன்பே! உன் நினைவுகள்
ReplyDeleteஅருகில் நீ இல்லாதபொழுதும் //
உன் நினைவுகள் பிறகு நிறுத்தற் குறியீடுகள் இட்டால் விளக்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும்!!
இயல்பான நல்ல கவிதைகள்.. முக்கியமாக கவிதைகளை விட அதற்கான படத்தேர்வு மிக்க மிக்க சிறப்பு.!!
ReplyDelete@தம்பி கூர்மதியன் said..
ReplyDeleteகன்னத்தை துடைத்தது அழுகையினால் இல்லை.. :)
தங்கள் கருத்துக்கு நன்றி கூர்மதியன்!
ஹோஹோ!
ReplyDeleteநனையாதே என்று
ReplyDeleteகுடைக்குள் உன்னை இழுக்கையிலே
நனைகிறேன் நான்
உன்னாலே உன்னாலே..//
ரசனை அருமை.
யம்மாடி!காதல் கவிதைகள் கலக்கல்!
ReplyDelete