*****************************************************
கைப்பிடியில் இருந்து
திமிரும் குழந்தையாய்
என்னுடைய காதலும்
அவளுடைய மறுதலிப்பும்
*****************************************************
குறுஞ்சிரிப்புடன் மறுத்திருக்கலாம்
அவள் மீதான என் காதலை
குமுறி அழுது மறைக்கிறாள்
என் மீதான அவளின் காதலை
*****************************************************
காணாமல் போனவர்கள் பட்டியலில்
என் இதயமும் இப்பொழுது
தொலைந்த இடமும்
தொலைக்கப்பட்ட விதமும்
ஏன்..
தற்போதைய அதன் இருப்பிடமும்
அவளறிவாள் நன்றாகவே
இருந்தும் மறுதலிக்கிறாள்
அப்பாவி குற்றவாளியாய்
*****************************************************
நீண்ட நகங்களுக்கு
நக சாயம் பூசுவது போல
நான்..
நீட்டிய ஒற்றை ரோஜாவுக்கு
நட்பு சாயம் பூசுகிறாள்
*****************************************************
உணவருந்த பிடிக்கா
ஒரு முழுநிலவு இரவில்
தின்றுகொண்டிருக்கிறது என்னை
அவளின் நினைவுகள்..
*****************************************************
நான் வேண்டுவது
கூடை பூக்கள் இல்லை
அவள் சூடியிருக்கும்
ஒற்றை ரோஜாவை..
*****************************************************
நானறிந்த ரகசியம்
அவளின் காதல்
நானறியா ரகசியம்
அவள்..
*****************************************************
முதல் மழை எனை நனைத்ததே
ReplyDelete>>குறுஞ்சிரிப்புடன் மறுத்திருக்கலாம்
ReplyDeleteஅவள் மீதான என் காதலை
குமுறி அழுது மறைக்கிறாள்
என் மீதான அவளின் காதலை
மகுடக்கவிதை
கவிதை மழையில் நனைந்தேன்...
ReplyDelete///////
ReplyDeleteகுறுஞ்சிரிப்புடன் மறுத்திருக்கலாம்
அவள் மீதான என் காதலை
குமுறி அழுது மறைக்கிறாள்
என் மீதான அவளின் காதலை//////
என்ன ஒரு எதார்த்தம்...
////
ReplyDeleteநானறிந்த ரகசியம்
அவளின் காதல்
நானறியா ரகசியம்
அவள்..//////
இது நான் ரசித்தது...
தொடர்ந்து கலக்குங்கள் வாழ்த்துக்கள்...
திரட்டிகளில் இணைத்துவிடுங்கள் நண்பரே...
ReplyDeleteKalakkal
ReplyDeleteகுட்டிக் கவிதைகள் அசத்தல்..
ReplyDeleteசிறிது சிறிதாய்.. முற்றிலும் அருமை என்று சொல்லமுடியாவிடிலும்.. நல்ல கவிதைகள்..
ReplyDeleteஏன் ஓட்டுப்பட்டைகள் காணும்.?
ReplyDeleteஅன்பு நன்றிகள் சி பி சார்! :)
ReplyDeleteஅன்பு நன்றிகள் சௌந்தர்! :)
அன்பு நன்றிகள் கருன்! :)
அன்பு நன்றிகள் ராஜா! :)
அன்பு நன்றிகள் கூர்மதியன்! :)
எந்த ஓட்டு பட்டைகள்? புரியவில்லை..
அழகிய கவிதைகள்.படங்களும் கவிதைகள்
ReplyDeletegood
ReplyDeletemeeeeeeeeee the firstu..
ReplyDeleteநான் வேண்டுவது
ReplyDeleteகூடை பூக்கள் இல்லை
அவள் சூடியிருக்கும்
ஒற்றை ரோஜாவை.. //
ஒரு ஐந்து ரூபா குடுத்த ஒரு ரோஜா குடுக்க போறாங்க எதுக்கு போய் எதுக்கு avangalai dtb pannikitu :)))
உணவருந்த பிடிக்கா
ReplyDeleteஒரு முழுநிலவு இரவில்
//
எப்படி சொல்லியே பின்னாடி போய் புல் காட்டு கட்டவேண்டியது...
நா ஒன்னுமே சாப்டல,தூக்கம் வரல,அப்டின்னு போய் சொல்ல வேண்டியது.கடவுளே இம்சை தாங்க முடியலப்பா...
மீண்டும் தென்றல், மகிழ்ச்சி.. :)
ReplyDeleteசிவா.. நீங்க பண்றது எல்லாம் இங்க எங்களுக்கு டிப்ஸ் குடுக்கறீங்களா?! :)
நீண்ட நகங்களுக்கு
ReplyDeleteநக சாயம் பூசுவது போல
நான்..
நீட்டிய ஒற்றை ரோஜாவுக்கு
நட்பு சாயம் பூசுகிறாள்
ஆஹா ............
காதலை
காதலாய்
காதலியிடம்
காதலுடன்
சொல்லிய வேளையிலே
காதலை
நட்பை
நகர்த்தும்
நெருடலை
அழகாய் சொல்லி உள்ளீர்கள்
அருமை
எல்லாக் கவிதைகளும் மிக மிக அருமை
ReplyDeleteபடங்களும் அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
WHERE IS NEXT POST????WHENN...
ReplyDelete