நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

அன்புள்ள அன்பே!


தேட நான் இருந்தும் 
கிடைப்பதற்கு நீ இருந்தும்
குறிசொல் கிடைக்கவில்லை 


கூகிள் ஆர்குட்... 
அங்கும் இங்கும் அலைந்து
நானும் தொலைந்தபின்


தோழியாய் இருக்க அனுமதி கேட்டு...
உன்னுடைய விண்ணப்பம்...
ஐயோ! என்னைத்தான் நீயும் தேடினாயா?
என் அன்புள்ள அன்பே!©

ஒரு வானவில் வந்து மறைந்து விட்டது



மழை வந்து.. 
மண்ணை தீண்டும் போதெல்லாம்
மனம் உன் நினைவை தூண்டுதே...

இதோ... 
இலை சிந்தும் துளி நீரில் கூட உன் முகம்
துப்பட்டா போல் விரிந்த வானவில்
மழை வரவிற்கு மண்வாசனை 
உன் வரவிற்கான மருதாணி வாசனை.. 

தேநீர் கோப்பை 
தேவையற்று கிடக்கிறது
படிந்து கிடக்கும் 
உன் விரல் ரேகைகள் அதிலே 
குடை பிடித்து.. 
என் வாசல் கடக்கும் குழந்தை போல்
விடை பெற்று போன பெண்ணே...
ஒரு வானவில் வந்து மறைந்து விட்டது 

அடர்ந்து பொழிகிறது வானம்
இருந்து வேர்த்து கொண்டே இருக்கிறேன்
இடைவிடாத உன் சிரிப்பு
இப்போதும் ஒலித்து கொண்டே இருக்கிறது
மழையின் துளிகளில்

மிக நீண்ட மழை துளிகள், உன் விரல்கள்,
பிடிக்க முயன்று தோற்று போன நான்
வீட்டுக்குள் வரபிடிக்காமல் வீதியோடு போகிறது
நீ என்னை விட்டு போனது போலவே

என்னால் வரமுடியவில்லை
வீட்டை விட்டும் 
உன் நினைவுகளை விட்டும் தான்.. ©
Related Posts Plugin for WordPress, Blogger...