கரடி பொம்மை :)
காற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை
நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..
06 May 2011
கொஞ்சமாய் என்னை..
கடத்தி கொண்டு போயாவது
காதல் செய்
திருடிக்கொண்டு சென்றாவது
முத்தங்கள் கொடு
கன்னத்தில் அறைந்த பின்பாவது
காற்றுபுகாமல் அணைத்துக்கொள்
கோபத்துடன் திட்டிவிட்டாவது
செல்லமாய் கொஞ்சிக்கொள்
என் அழுகைகள் முடிந்தபின்னராவது
கொஞ்சமாய் என்னை புரிந்துக்கொள்!
சமையல் முடிந்துவிட்டது
அவசரமாய் சமைத்துக்கொண்டிருந்தவளிடம்
"என்ன இருக்கிறது?" என்றேன்..
"சாம்பாரும், சாதமும்" என்றாள்
எரிச்சலும் கோபமுமாய்
"தொட்டுக்கொள்ள என்ன?" என்றவனிடம்
நீட்டுகிறாள் அவளின் ஒற்றைவிரலை
கண்ணால் சிரித்தபடி..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)