நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

15 June 2012

இப்படிக்கு அம்மா!



நெடுநாட்களாய் உன்னை காணவில்லை
நீ வருகின்ற தேதியும் தெரியவில்லை
பெரியதாய் நான் எதையும் சேர்க்கவில்லை
பேதைமை நிறைந்த என் அன்பை தவிர

வீட்டு வாசலில்
ஏறி இறங்க படிக்கட்டுகளும்
அதன் நடுவில்
நீ விளையாட
ஒரு சறுக்குமரமும்
கட்டி முடித்தது
காலப்போக்கில் உடைந்துவிட்டது
என்மனதை போலவே

நம் வீட்டுத்தோட்டத்தில்
நட்ட செடிகள்
மரங்களாகி விட்டன
தேவையில்லாத உறவுகளாய்
இலைகள் கூட உதிர்ந்துவிட்டன
உன் வரவிற்கான
அவகாசங்களும் குறைந்துவிட்டன

மிக குறுகிய
என் மடியில்
இப்போதும் இருக்கிறது
உனக்கோர் இடம்
மிக வளர்ந்த
உன் மனதில்
எனக்கோர் இடம்
இப்போதாவது இருக்கிறதா?!

உன்னை பற்றி
எனக்கு பல கனவுகள்
உன்னை பற்றி
உனக்கும் பலபல கனவுகள்
உன் கனவுகள் கைகூட
விற்றுவிட்டேன் நான்
என் கனவுகளையும்
உறக்கத்தையும்!

என் உடல்நலம் குறித்து
என்றோ ஒருநாள் விசாரிக்கிறாய்..
வறுமையும் வயோதிகமும்
தனிமையும் தள்ளாமையும்
தனித்தனியே வாட்டினாலும்
நலம், நலமறிய அவா!
என்றே சொல்லி
நலிந்து போகிறேன்

உன்னை வற்புறுத்தும் எண்ணம்
எப்போதும் எனக்கு இருந்ததில்லை
மிக மெல்லிய குரலில்
உன்னிடம் இறைஞ்சுகிறேன்
ஒரே ஒரு முறை
உன்னை பார்த்துவிடவே துடிக்கிறேன்
உயிர்போகும் பயத்தில் இல்லை..
பார்வை குறையும் பரிதவிப்பில்!



குறிப்பு: இன்றைக்கு காலையில் தினமலர் பத்திரிக்கையை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது படிக்க நேர்ந்தது கேரளாவில் வயதான ஒரு தம்பதியர் குளியலறையில் மூன்று தினங்கள் மாட்டிக்கொண்டதை. கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துகொண்டிருக்க, உதவி செய்ய மனைவி முயலுகையில் கதவு திடீரென்று மூடிக்கொள்ள, கதவை திறக்க இயலாமல், தண்ணீரை மட்டும் குடித்தபடி இருந்திருக்கின்றனர். பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்து உதவி செய்து இருக்கின்றார்கள். ஆனால் இது பற்றி அந்த வயதான தம்பதியர், தங்கள் இரு பிள்ளைகளுக்கு தெரிவிக்க கூட விருப்பமின்றி இருந்திருக்கிறார்கள். மிக வேதனையாக இருந்தது! இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும், கொடுமையிலும் கொடுமை! இன்றைய பதிவு அதை ஒட்டி எழுதி இருக்கிறேன்!

28 comments:

  1. It is squeezing my heart. I'm feeling some heavy burden in my chest. My eyes are filled with tears. My mom and my ammu chellam are waiting for me like this.

    ReplyDelete
  2. Thank you Guruji for your comment! I wish you to be with ur mom and ur ammu forever.

    ReplyDelete
  3. மிக குறுகிய
    என் மடியில்
    இப்போதும் இருக்கிறது
    உனக்கோர் இடம்
    மிக வளர்ந்த
    உன் மனதில்
    எனக்கோர் இடம்
    இப்போதாவது இருக்கிறதா?!

    கவிதை மனம் நெகிழச் செய்து போனது
    அருமையான படைப்பு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் அன்பு நன்றிகள் ரமணி சார்!

      Delete
  4. //உன் கனவுகள் கைகூட
    விற்றுவிட்டேன் நான்
    என் கனவுகளையும்
    உறக்கத்தையும்!//
    எதையும் எதிர்பார்க்காத உறவல்லவா?ஒரு தாயின் காத்திருப்பின் வலி சொல்லும் கவிதை நன்று

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு அன்பு நன்றிகள் சார்! தாயின் வலிகள் பிள்ளையை கருவில் சுமக்கும் போதே ஆரம்பித்து விடுகின்றன..

      Delete
  5. செய்தியைப் படித்த்தும் மிகவும் மனது வேதனை அடைந்தது.

    //இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும், கொடுமையிலும் கொடுமை! //

    மிகச்சரியாகச் சொன்னீர்கள்.

    கவிதையும் அருமை.

    //உன்னை பற்றி
    எனக்கு பல கனவுகள்
    உன்னை பற்றி
    உனக்கும் பலபல கனவுகள்//

    இதில் மூன்றாவது வரியில் முதல் வார்த்தை ”என்னை” என்று இருக்கணுமோ என நினைத்தேன். அப்படியே ”உன்னை” என்றே இருக்கலாம் தான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு அன்பு நன்றிகள் கோபாலன் சார்! இளமையின் வறுமை நிலையாவது
      சில நேரங்களில் வாழ்க்கையில் சாதிக்க ஒரு ஊன்றுகோலாய் இருக்கிறது. ஆனால்
      முதுமையின் தனிமை மேலும் மேலும் வெற்றிடத்தை நிரப்பி செல்கிறது..
      இன்று காலை முதலே மனம் கனத்துக்கிடக்கிறது..

      Delete
  6. //இளமையின் வறுமை நிலையாவது சில நேரங்களில் வாழ்க்கையில் சாதிக்க ஒரு ஊன்றுகோலாய் இருக்கிறது. //

    ஆமாம். உண்மை தான். இதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு தான். நான் எழுதியுள்ள “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” தொடர் பதிவினை முடிந்தால் படித்து விட்டுக் கருத்துக்கூறுங்கள்.

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html பகுதி 1 / 8
    http://gopu1949.blogspot.in/2012/03/7.html பகுதி 7 / 8

    பகுதி 8 / 8
    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    அன்புடன்
    vgk

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம்! :)
      கண்டிப்பாக படித்து பார்க்கிறேன்.. பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கோபாலன் சார்!

      Delete
  7. மனம் நெகிழச் செய்த மிகவும் அருமையான பதிவு. மனம் கனக்க வைத்துவிட்டது உங்கள் கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் அன்பு நன்றிகள் நட்பு! :)

      Delete
  8. மனம் தொட்டு ஊடுருவும் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் ஜனா! :)

      Delete
  9. பாரம் சேர்க்கும் கவிதை. நன்று.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் குமரன்! :)

      Delete
  10. #உன் கனவுகள் கைகூட
    விற்றுவிட்டேன் நான்
    என் கனவுகளையும்
    உறக்கத்தையும்!#
    இத்தனை நாட்கள் உங்கள் ப்ளாக்கை ஏன் பார்க்காமல் போனேனென்று ஏங்க வைக்கும் வரிகள் ...

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய பாராட்டுதலுக்கு அன்பு நன்றிகள் ஆனந்த்! :)

      Delete
  11. மிக குறுகிய | என் மடியில் | இப்போதும் இருக்கிறது | உனக்கோர் இடம் | மிக வளர்ந்த | உன் மனதில் | எனக்கோர் இடம் | இப்போதாவது இருக்கிறதா?!
    -அருமையான, மனதைத் தொட்ட வரிகள். பெற்றோரின் அருமை அறியாமல் கவனிக்காமல் விட்டுவிட்டு பின்னால் வருந்தும் பிள்ளைகள் இன்று ஏராளம். நல்லதொரு கவிதை படித்த திருப்தியிலும், உங்கள் எழுத்தை மிக தாமதமாய் கவனித்த வருத்தத்துடனும் -பா.கணேஷ்.

    இதுபோன்ற சப்ஜெக்டில் நான் எழுதிய கதை (நமக்கு கவிதை வராதுங்கோவ்) நேரமும் மனமும் இருந்தால் படித்துப் பாருங்கள்.
    http://minnalvarigal.blogspot.com/2012/04/blog-post_08.html

    ReplyDelete
  12. அடுத்த பதிவை
    ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்

    ReplyDelete
  13. Replies
    1. மிக்க நன்றி நட்பு! :)
      நீங்கள் கூறியபடி Email widget ADD செய்துவிட்டேன்
      தங்கள் வருகைக்கும் அன்பு நன்றிகள்!

      Delete
  14. காலப்போக்கில் உடைந்துவிட்டது
    என்மனதை போலவே

    superb.

    ReplyDelete
  15. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_9.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  16. மிகவும் சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...