நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

13 August 2011

நீ சிணுங்குகிறாய் காதலியாய்

உன்னை வரையும் போது
சிலிர்த்து நிற்கிறது தூரிகையும்
ஓவியமாய் நீ இருந்தாலும்
பேசமறந்து நிற்பது நானேகாதலுடன் பார்க்கிறேன்
என்னை நானே 
கண்ணாடியிலும்
உன் கண்களிலும்

நீ கடித்து 
பாதி தந்ததால் 
சிவந்து போனது 
கொய்யாப்பழம்

நீ அழைக்கும் போதுமட்டும்
காதலாய் சிணுங்குது கைபேசி
அழைப்பை ஏற்றபின்
காதலுடன் சிணுங்குகிறாய் நீ
   
சிறு வயதில் 
பள்ளிகூட வாசலில் 
அம்மா காத்திருந்திருப்பாள் 
உன் வருகைக்காய்
கல்லூரி வாசலில் 
காத்திருக்கிறேன் நான் 
உனக்கே உனக்கென 
இன்னுமொரு அம்மாவாய்

புத்தகம் பேனா பென்சில்
எல்லாம் தொலைத்தது போல
என் இதயத்தையும்  தொலைத்துவிடாதே
எங்கேனும் பத்திரப்படுத்தி வை
மைனாக்களை ரசிக்கிறேன் என்று
மையிட்ட கண்களினால் 
முறைத்தபடி நிற்கிறாள்  
என் முன்னே
இறகுகளை ரசிக்கட்டுமா
இல்லை
இமைக்கவும் மறந்து  
இவளை ரசிக்கட்டுமா?!

13 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. எவ்வளவு அழகு ....?
  ரசனையின் ரசிகை நீ...
  காதலின் காதலி நீ....
  அழகான வார்த்தைகளை அழகாக்குவதில் வித்தகி எனதருமை தோழி...

  ReplyDelete
 3. எங்கும் எதிலுமாய் எப்போதும் காதலி இருப்பதை
  எவ்வளவு அழகாகச் சொல்லிப் போகிறது
  இந்தக் கவிதைகள் !
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. சிறு வயதில்
  பள்ளிகூட வாசலில்
  அம்மா காத்திருந்திருப்பாள்
  உன் வருகைக்காய்
  கல்லூரி வாசலில்
  காத்திருக்கிறேன் நான்
  உனக்கே உனக்கென
  இன்னுமொரு அம்மாவாய்
  //

  லாஜிக் இடிக்குதே.adapavingala.
  சைட் அடிக்க நிக்கறதுக்கு எப்படி ஒரு பேரா
  ஓகே noted வித் தேங்க்ஸ்

  ReplyDelete
 5. ஆல் போடோஸ் கவிதை சூப்பர் அழகாஎழுதுறீங்க
  என் பாசமான தோழி

  ReplyDelete
 6. நீ கடித்து
  பாதி தந்ததால்
  சிவந்து போனது
  கொய்யாப்பழம்
  ///

  அது கொய்ய பழம் இல்லையே.
  அது தக்காளி போல இருக்கே
  ஹே cheating cheating.
  நீங்க மறுபடியும் கவிதை எழுதுங்க

  ReplyDelete
 7. போன் போட்டோ சூப்பர்
  போன வருஷம் சிவா எப்படிதான் இருந்தார்
  என்று நான் வேற சொல்லனுமா.

  ReplyDelete
 8. அருமையான கவிதை...படங்கள் அழகோ அழகு!

  ReplyDelete
 9. கலக்கலான கவிதை வரிகள்.

  ReplyDelete
 10. அழகான கவிதை,படங்களும் அருமை.தக்காளி மட்டும் மாறிவிட்டது.

  ReplyDelete
 11. exicited words. hi sister i too need to start blogspot can you help me please.

  ReplyDelete
 12. புத்தகம் பேனா பென்சில்
  எல்லாம் தொலைத்தது போல
  என் இதயத்தையும் தொலைத்துவிடாதே
  எங்கேனும் பத்திரப்படுத்தி வை//

  ரசித்தேன் அன்பரே இவ்வரிகளை தொடருங்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...