இரட்டை கோபுரங்களை
அருகருகில் பார்த்தபோது
ஒன்று என்னை போலவும்
மற்றொன்று உன்னை போலவும்
அருகருகில் நிற்கின்றன என்றேன்
உயர்ந்து நிற்பது
அவன் என்று
உடனே சொல்லுகிறான்
மௌனமாய் நிற்கிறோம்
கோபுரங்களும் நானும்
நண்பர்களும் உறவினர்களும்
ஓயாது வருகின்ற நாட்களில்
சமையல் அறைக்குள் கூட
எட்டிபார்த்திடாத அவன்
என்னை பற்றி சிரித்தப்படி
எல்லோரிடமும் சொல்லுவதெல்லாம்
"அருமையாய் சமைப்பாள்"
என்பது தான்
வெறுமையான சிரிப்புடன்
நான் நினைப்பதெல்லாம்
"சமையல் தெரியாத பெண்ணாய்
நான் இருந்திருந்தாலே
சந்தோசமாய் வாழ்ந்திருப்பேனோ?!"
இரண்டு கவிதைகளின் இறுதி வரிகளும்
ReplyDeleteநிறையச் சொல்லிப் போகின்றன
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
குழந்தை மனம் கொண்ட பெண்களின் உணர்வுகளை மிக அழகாக எடுத்துச்சொல்லும் அழகிய கவிதைகள். படங்களும் சூப்பர். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஉணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை தோழி..
ReplyDeleteமிக வித்தியாசமான முறையில் மன உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை தோழி..
ReplyDelete//மௌனமாய் நிற்கிறோம்
ReplyDeleteகோபுரங்களும் நானும்//
என்று அற்புதமாக முடிகிற அழகிய கவிதை!
பிரமாதம்!
Nanragave erukkirathu madam
ReplyDelete