நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

17 March 2012

நீ கவலைகளை பரிசளிக்கிறாய்

நான் கவிதைகளை பரிசளிக்கிறேன்
நீ கவலைகளை பரிசளிக்கிறாய்


எதிர்பாராத நேரங்களில் 
எதிர்ப்பட்டு விடுகிறது
உன் கோபமும்
என் கண்ணீரும்

என் முகம் மறைத்து 
ஓடிவிடவே தோன்றுகிறது
நீ முகம் காட்டும் வேளைகளில்

என் கேள்விகளுக்கெல்லாம் 
உன் மௌனங்கள் 
சரியான பதிலில்லை என்றாலும் 
தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

பொறுமை இழந்து போகிறது
என் மனம் 
பெருமை இழந்து போன 
நம் காதலால்

'என்றாவது என்னை 
நீ புரிந்து கொள்வாய்'
உணர்ச்சிகள் மேலிட 
நான் பேசுகையில் 
உன் கண்கள் காட்டும் 
வெறுமைகள் 
எனக்கு புரியவேயில்லை

பருவமாற்றம் போலவே 
மாற்றி மாற்றி உன்னை 
வெறுத்ததிலும் விரும்பியதிலும் 
வறண்ட வானிலையில்
நம் காதல் நிலா

உன்னுடைய எல்லைகளில் நீயும்
என்னுடைய இயலாமைகளில் நானும் 
ஊடலும் கூடலுமாய் 
விளையாடுகையில்
ஏனோ..
என் நினைவில் வருகிறது 
சிறுவயதில் விளையாடிய 
'அப்பா அம்மா விளையாட்டு' 

6 comments:

  1. கவலைகள் பிரசவித்த கவிதைகள்
    வலியுடன் இருந்தபோதும்
    அதிகப் பொலிவுடன் பிரகாசிக்கின்றன
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. kuchi mittai vaangi tharen..alakoodathu okva..
    samathu pappava erukanum...:)

    ReplyDelete
  3. >>நான் கவிதைகளை பரிசளிக்கிறேன்
    நீ கவலைகளை பரிசளிக்கிறாய்

    good one

    ReplyDelete
  4. சிறுவயதில் விளையாடிய
    'அப்பா அம்மா விளையாட்டு'
    >>>>
    இது சின்ன வயசுல இருந்தே வந்த காதலா?

    ReplyDelete
  5. உங்கள் சிறிய கவிதைகளில் பெரிய பெரிய கருத்துக்கள் பொதிந்துள்ளன. சில பேர் கவிதை என்ற பேரில் ஏதோ எழுதுவார்கள் எதுகை மோணையோடு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாது ஆனால் உங்கள் கவிதைகள் மிக எளிமையோடு கருத்துக்கள் உள் அடங்கியதுமாக உள்ளது வாழ்த்துக்கள் தோழி. வாழ்க வளமுடன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...