அவள் விளையாட்டில்
நானொரு பொம்மை
யாரோ திட்டியதற்கு
என்னை கோபிப்பாள்
என்னிடம் கோபம் கொண்டதற்கு
தன்னையே திட்டிக்கொள்வாள்
அவள் பேச ஆரம்பிக்கும்
தருணங்கள் எனக்கு வெளிச்சம்
அதை முடிக்கும் தருணங்கள்
கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்
சில நேரம் பெரியமனுஷியாய்
அறிவுரைகளை பேசுவாள்
பல நேரம் சிறுகுழந்தையாய்
அறிவுரைகளை வெறுப்பாள்
ரகசியங்கள் தொலைத்து
என்னிடம் அவள் அழுகையிலே
என்னை அவளிடம்
தொலைத்த ரகசியத்தை
யாரிடம் சொல்லி நான் மகிழ
தேவதை கதைகள் கேட்பாள்
தினம் இரவில் என்னிடம்
ஆனால்
நான் சொல்லும் கதைகள்
எல்லாம் அவளை பற்றியே
எல்லாவற்றையும் என்னிடம்
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்
'என்னை காதலிக்கிறேன்'
என்பதை தவிர
பாடல்களும் புத்தகங்களுமாய்
பகிர்தல்கள் நடக்கையிலே
தேடல்களும் ஊடல்களும்
தொடரும் உறவினிலே
ஒரு நாள் சொல்லியேவிட்டேன்
கண்ணில் நீர் வழிய
அவள் நிற்க
கலவரம் கொண்டு
நான் தவிக்க
நட்பென்னும் மந்திரத்தை
அவள் ஓதுகிறாள்
நடுக்கடலில் மூழ்குகிறது
என் காதல் கப்பல்
எப்போதும் போலவே
இப்போதும் சிரிக்கிறாள்
இயல்பாக பேசி
எப்போதும் போலவே
இப்போதும் இருக்கிறேன்
அவளை புரிந்தவனாய்
எனக்கு தெரியும்
நான் இல்லாத விளையாட்டை
அவள் விரும்பமாட்டாள் என்று...
ரசித்தேன்
ReplyDelete:)SO SWEET..
ReplyDeleteI need copy rights for this poem, the theame looks like my own stroy.... :) very nice...
ReplyDeleteகப்பல் மூழ்கினாலும் காதல் என்றும் மூழ்குவதில்லை...
ReplyDelete-By Titanic Hero Leonardo decaprio :)
அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html
ReplyDeleteஅருமை அன்பரே வாழ்த்துக்கள்
ReplyDelete