நடும் விதைகளெல்லாம்
மரமாவது இல்லை
பல நேரங்களில்
ஆனால்...
விழும் விதைகள் கூட
முளைத்து விடுகின்றன
சில நேரங்களில்
நடுவது
நம் செயல் என்றாலும்
பின் எழுவது
விதைகளின் விடாமுயற்சியே
மனித மனதிலே
வேதனைகள் விருட்சமாகின்றன
பல நேரங்களில்
நம்பிக்கைகள் துளிர்க்கின்றன
சில நேரங்களில்
நடப்பதும் அதை முடிப்பதும்
நம் கையில் இல்லை
என்றாலும்...
வேதனைகளை உடைத்து
சாதனைகளை படைப்பது
விடா முயற்சிகளும்
விழா நம்பிக்கைகளுமே..!
நம்பிக்கை தானே வாழ்க்கை...
ReplyDeleteஎப்படி எப்படி... எப்படி எப்படி எப்படி...
நேத்து கவிதை
ReplyDeleteஇன்னைக்கு தத்துவம் நாளை என்னவோ ..
நல்ல இருக்கு நம்பிக்கை கவிதை ...
(ஓகே அப்படியே ஒரு காபி சொல்லேன்:) )
தன்னம்பிக்கை ததும்பியது.தைரியமூட்டும் வரிகள்.
ReplyDeleteஃஃஃஃஃஃநடப்பதும் அதை முடிப்பதும்
ReplyDeleteநம் கையில் இல்லை ஃஃஃஃ
நியாயமான உண்மை..
நன்றி நன்றி
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record
//வேதனைகளை உடைத்து
ReplyDeleteசாதனைகளை படைப்பது
விடா முயற்சிகளும்
விழா நம்பிக்கைகளுமே..!//
அருமை அருமை.வேதனைகளையும் சோதனைகளையும் சாதனைகளாய் மாற்றுவோம்.
உயிரில் பூத்த என் ஒற்றைக் காதல்.
நம்பிக்கையூட்டிப் போகும் அருமையான கவிதை
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்