சண்டைகளின் பொழுது
வார்த்தைகளை தேடுகிறாய்
சாமாதானங்களின் பொழுது
ரோஜாவை தேடுகிறாய்
எப்பொழுது தான்
என் மனதை தேடுவாய்?
காதலிக்கும் பொழுது
கணக்கில்லாமல் கொடுத்தாய்
சண்டைகள் போடாமலிருக்க
கல்யாணத்திற்கு பின்னரோ
கடமைக்கு கொடுக்கிறாய்
சண்டைகள் முடிந்த பிறகு
சிறு குழந்தையெனவே அழுகிறேன்
நம் சண்டைகளின் நடுவில்
நடிப்பென சொல்கிறாய்
நான் நடிகை இல்லை
உன் காதலி
நம் ஒவ்வொரு சண்டைகளையும்
உடனே மறந்து விடுகிறாய்
நாம் காதலித்த கணங்களை
மறந்ததை போலவே
எப்போதும் என்னுடன் இருக்கிறது
நீ கொடுத்த கரடிபொம்மை ஒன்று
அதனுடனும் நான் சண்டைபோடுகிறேன்
சண்டைகள் முடிந்த பின்
அதுமட்டும் மன்னிப்பு கேட்காது
உன் பெயர்தான் அதற்கும்
அருமை
ReplyDeleteபடங்களுடன் பதிவு மிக மிக அருமை
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
நன்னா இருக்கு!
ReplyDeleteஅதுமட்டும் மன்னிப்பு கேட்காது
ReplyDeleteஉன் பெயர்தான் அதற்கும்//
அருமையான டச்சிங் வரிகள்...!!!
அருமையான வரிகள்.....
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டிருகிங்க. வாழ்த்துக்கள்.
வாசிக்க:
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு
அனைத்தும் அருமை
ReplyDeleteஇன்று
நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?
அன்பு நன்றிகள் மனோ சார், ரமணி சார், பிரகாஷ், ராஜா, நிலவன்பன், கோவை நேரம்! :)
ReplyDeleteஎப்போதும் போல அருமை&பலருக்கும் என்னடா இது நம்மள பத்தி சொல்றமாதிரி இருக்கேனு தோன்ற வைக்கும் வரிகள்.
ReplyDeleteஉங்கள் தளத்தை சில தடவை பாத்துவிட்டு போனேன்.மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.தொடருங்கள்,வாழ்த்துகள்.
:)
ReplyDeleteஎப்போதும் என்னுடன் இருக்கிறது
ReplyDeleteநீ கொடுத்த கரடிபொம்மை ஒன்று
அதனுடனும் நான் சண்டைபோடுகிறேன்
சண்டைகள் முடிந்த பின்
அதுமட்டும் மன்னிப்பு கேட்காது
உன் பெயர்தான் அதற்கும்
//
am sorry am very late..:)
so cute..