நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

07 June 2012

என் கண்களையே பார்க்கிறாய்


*************************************************************
ஒரு சிறுபிள்ளை என
உன்னை நினைத்து
சமாதனப்படுத்த முயல்கிறேன்
சட்டென்று
மடியில் படுக்கிறாய்
மார்புகளை தேடும்
குழந்தை என இல்லாமல்
என் மனம் தேடும் குழந்தையாய்..
**************************************************************
**************************************************************
வலிக்கிறது என்று
நான் சொல்லுகையில்
என் கண்களையே பார்க்கிறாய்
கண்ணீர் சிந்திவிடுவேனோ என்று
உன் கைகளில்
முகம் புதைத்துக்கொள்கிறேன்..
என்னுடைய
சிறுதுளி கண்ணீரும்
உனக்கே சமர்ப்பணம்..
***************************************************************


4 comments:

  1. மிகச் சிறந்த ஒரு படைப்பு.
    மேலும் மேலும் இது போன்ற சிறந்த படைப்புக்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.

    ReplyDelete
  2. கவிதை நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. //கண்ணீர் சிந்திவிடுவேனோ என்று
    உன் கைகளில்
    முகம் புதைத்துக்கொள்கிறேன்..//
    வரி பிரமாதம்!

    ReplyDelete
  4. #மார்புகளை தேடும்
    குழந்தை என இல்லாமல்
    என் மனம் தேடும் குழந்தையாய்..# அருமை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...