நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

30 May 2011

அவள் அழுகையில்


அவள் அழகு
அவள் அழுகையில் 
அழகோ அழகு.. 

அவள்.. 
அழுவதையே விரும்புகிறேன்
சிரிப்பதை விட
அப்போது தானே
மூக்கை துடைப்பாள் 
என் சட்டை பிடித்திழுத்து 

அவள் அழுகையில்
சற்றே நனையும் 
காதோர தலைமுடி   
மயிலிறகு...
மழையில் நனைவதை போல

அழுகையிலும் 
அழகாய் அழ 
எப்படி முடிகிறது
அவளால் மட்டும்?!

அழுதுகொண்டே..
அதற்காய் வெட்கம் கொண்டு
சற்றே சிரிக்க முயன்று
பின் தோற்று 
மெல்ல விசும்புகையில்
ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
அவளின் முன்னே 

சிவந்திருக்கும் கண்களும்
படர்ந்திருக்கும் கண்ணீரும்
பனியின் நடுவே ரோஜாக்களாய்  

திடீர் மழை போலவே
அவளது கண்ணீரும்
அழுது முடிந்த பின்னும்
இமைகளில் ஈரம்  
இலைகளின் நீராய்

19 comments:

  1. அவள் அழுகையில் மிக அழகாக இருக்கக் கூடும்
    ஆயினும் அழுகையை ரசித்தல் அன்புக்கு அழகா?
    சிரிக்கையில் அழகில்லையாயினும்
    சிரிக்கவிட்டு மகிழ்தல் அல்லவோ
    உண்மை அன்பின் உன்னதப் பண்பு

    ReplyDelete
  2. அழுகையிலும்
    அழகாய் அழ
    எப்படி முடிகிறது
    அவளால் மட்டும்?!//

    அசத்தல் அசத்தல்....!!!

    ReplyDelete
  3. அதற்காய் வெட்கம் கொண்டு
    சற்றே சிரிக்க முயன்று
    பின் தோற்று
    மெல்ல விசும்புகையில்
    ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
    அவளின் முன்னே

    அட அட மச்சி நீ கலக்கிட்ட போ....
    உனக்கு ஒரு mootai 5ஸ்டார் முட்டாய் போக்கே உனது கவிதைக்கு..so sweet

    ReplyDelete
  4. //
    அவள் அழகு
    அவள் அழுகையில்
    அழகோ அழகு..

    ///
    அருமையான வரி

    ReplyDelete
  5. கவிதை வரிகளும், அதற்கான பட தேர்வும் உங்கள் மெல்லிய உள்ளத்தை வெளீப்படுத்துகிறது

    ReplyDelete
  6. அழுதுகொண்டே..
    அதற்காய் வெட்கம் கொண்டு
    சற்றே சிரிக்க முயன்று
    பின் தோற்று //
    அழகு! அழகு!அருமை. கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. ///
    அழுதுகொண்டே..
    அதற்காய் வெட்கம் கொண்டு
    சற்றே சிரிக்க முயன்று
    பின் தோற்று
    மெல்ல விசும்புகையில்
    ஒரு மிட்டாயை நீட்ட தோன்றுகிறது
    அவளின் முன்னே ////

    அசத்தல் வரிகள்...

    ReplyDelete
  8. ரசிக்கும் படியான கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. அருமையான, மென்மையான கவிதை...

    ReplyDelete
  10. சரிங்க ரமணி சார்! இனிமே சிரிக்க வைச்சிடுவோம்.. :)

    நன்றி மனோ சார்! உங்க செடி எப்படி இருக்கு.. எவ்ளோ குடம் தண்ணி ஊத்தி எவ்ளோ பூ பூத்தது?

    மிட்டாய்க்கும் பூவுக்கும் நன்றி சிவா! :)

    தங்கள் வருகைக்கு நன்றி ராஜா.. :)

    சி பி சார்! ரொம்ப ரொம்ப நன்றி என் மனச படிச்சி சொன்னதுக்கு.. :)

    அடிக்கடி வர ராஜிக்கு என் அன்பு நன்றிகள்!

    சௌந்தர் சார்! இப்போ தான் உங்க blog ல இருந்து வரேன் :)

    அன்பு நன்றிகள் சிசு!

    ReplyDelete
  11. //அவள் அழுகையில்
    சற்றே நனையும்
    காதோர தலைமுடி
    மயிலிறகு...
    மழையில் நனைவதை போல//
    அழுகையில் இத்தனை அழகா!

    ReplyDelete
  12. //திடீர் மழை போலவே
    அவளது கண்ணீரும்
    அழுது முடிந்த பின்னும்
    இமைகளில் ஈரம்
    இலைகளின் நீராய்//
    என்னமா ரசிச்சிருக்கீங்க!

    ReplyDelete
  13. மிக இனிமையான அருமையான கவிதை

    ReplyDelete
  14. தங்கள் அன்பு கருத்துக்களுக்கு நன்றி லிங்கம் சார்! :)

    அன்பு நன்றிகள் மீனு! :)

    ReplyDelete
  15. சில குழந்தைகள் அழும் போது ரசித்ததுண்டு.குமரியின் அழுகையும் அழகுதான் போலும்!

    ReplyDelete
  16. //திடீர் மழை போலவே
    அவளது கண்ணீரும்
    அழுது முடிந்த பின்னும்
    இமைகளில் ஈரம்
    இலைகளின் நீராய்//
    nice lines

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...