நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

18 May 2011

தண்டச்சோறு


ஒரு வாய் சோறூட்ட 
நிலா காட்டினாள் அம்மா
இன்று.. 
ஒரு வேளை சோறு கிடைக்க
காட்டவேண்டும் நான் 
என் மதிப்பெண் பட்டியலை 
பங்கு சந்தையில் மட்டுமே 
ஏற்ற இறக்கங்கள் அனுமதி
மதிப்பெண் பட்டியலில் இல்லை 
பெற்றபோது கொண்ட பெருமையெல்லாம்
பெறாத மதிப்பெண்களுக்காய்  தொலைகிறது

தோற்று போன என்னுடைய 
ஒரு சில பரிட்சைகளுக்காய்
தாவணியை பெற்றிருக்கலாம் 
அம்மாவின் புலம்பல்
பெற்றதே வீண் 
அப்பாவின் ஆத்திரம்
ஏன் படிப்பு ஏறவில்லை..?
என்னுடைய ஆதங்கம்
அழுது விட துடித்தாலும்
ஆண்மை தடுக்கிறது 

நண்பர்களெல்லாம் நல்லவரில்லை 
புத்தகம் மட்டுமே உற்றதோழன் 
புது புது மொழிகளாய் 
உதிர்த்து போகிறார்கள் 
சுற்றமும் சொந்தமும் 
புத்தகங்கள் எல்லாம்
புதிதாகவே இருக்கின்றன  
யாரும் படிக்காத 
என் மனது போலவே

எதை கேட்டாலும் 
பணமில்லை என்கிறார் 
மனமில்லாத அப்பா
ஒரு வேளை.. 
மதிப்பெண்கள் என்பதும் தொண்ணூறும் 
நூறு ரூபாய்களாய் மாறிடுமோ?!
எதையும் கேட்கவே விருப்பமில்லை 
மனமுடைந்த அம்மா 

வயது காலத்தில் 
பிள்ளைகள் பாரம் பெற்றவர்களுக்கு
வயதான காலத்தில்
பெற்றவர்கள் பாரம் பிள்ளைகளுக்கு
என்னைப்போல் எத்தனை பேரோ
இளம்நெஞ்சில் பாரம் சுமந்தபடி.. 
புரிதல் இல்லா பெற்றோர்களால் 

களவும் கற்று மற
மறந்தது பல என்றாலும்
மறக்காதது ஒன்று தான்
பெற்றவர்களின் அன்பை 
நிகழ்காலத்தை தொலைக்கிறார்கள்
என் எதிர்காலத்திற்காய்
நிஜம் சுடுகிறது
நிச்சயமாய் ஜெயிப்பேன்
நினைத்த மாதிரி இல்லாவிட்டாலும்
நினைத்தே பார்க்காத அளவுக்கு..


12 comments:

  1. அருமையான கவிதை.
    தண்டசோறாக இருப்பவனையும் சாதிக்க தூண்டும் வரிகள்.
    தொடரட்டும் உங்களது நற்பணி.

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் வெங்கடேஷ்! :)

    ReplyDelete
  3. முயற்ச்சிக்கு முறுக்கேற்றி இருக்கிறது . உங்களின் இந்தப் படைப்பு அருமையான வார்த்தை அலங்காரம் ,.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. >>பங்கு சந்தையில் மட்டுமே
    ஏற்ற இறக்கங்கள் அனுமதி
    மதிப்பெண் பட்டியலில் இல்லை

    வாட் எ லவ்லி திங்க்கிங்க்

    ReplyDelete
  5. >>பெற்றவர்களின் அன்பை
    நிகழ்காலத்தை தொலைக்கிறார்கள்

    இது 90% ஆட்கள் செய்யும் தவறு தான். வெய்யிலில் தான் நிழலின் அருமை தெரியும்

    ReplyDelete
  6. அருமையா கவிதை எழுதி கலக்கிட்டீங்க....

    ReplyDelete
  7. //நிச்சயமாய் ஜெயிப்பேன்
    நினைத்த மாதிரி இல்லாவிட்டாலும்
    நினைத்தே பார்க்காத அளவுக்கு..//

    முன்பெல்லாம் பக்கத்துவீட்டுக்காரர்களுக்கும் உறவினர்களுக்குமாய் விட்ட சவால் இன்று பெற்றவரை எதிர்த்து. எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும் -பெற்றோருக்கு.

    ReplyDelete
  8. அன்பு நன்றிகள் அனைத்து நட்பு உள்ளங்களுக்கும்! :)

    ReplyDelete
  9. //பெற்றபோது கொண்ட பெருமையெல்லாம்
    பெறாத மதிப்பெண்களுக்காய் தொலைகிறது//
    வலிகளை இந்த வரிகள் உணர்த்தும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...